ரூ.2.55 கோடியில் விற்பனை செய்யப்படும் கார் என்றால் சும்மாவா!! எல்லா பக்கமும் இதை பற்றித்தான் பேச்சு!
லோட்டஸ் (Lotus) நிறுவனம் ஒரு வழியாக இந்தியாவில் அதன் எண்ட்ரீயை கொடுத்துள்ளது. இந்த பிரிட்டிஷ் லக்சரி கார் நிறுவனத்தில் இருந்து முதல் காராக எலெட்ரே கடந்த நவம்பர் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.55 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய லோட்டஸ் எலெட்ரே காரை பற்றிய முக்கிய விபரங்கள்...
வேரியண்ட்கள் & விலை: ஸ்டாண்டர்ட், எஸ் மற்றும் ஆர் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் எலெட்ரே எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 கோடியாகவும், எஸ் வேரியண்ட்டின் விலை சற்று அதிகமாக ரூ.2.75 கோடியாகவும், டாப் ஆர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை இருப்பதிலேயே அதிகப்பட்சமாக ரூ.2.99 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

என்ஜின்: லோட்டஸ் எலெட்ரே ஓர் எலக்ட்ரிக் கார் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். இந்த காரில் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ட்யூயல் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் சிங்கிள் மோட்டார் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக 603 பிஎச்பி மற்றும் 710 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த எலக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைக்க 112kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
செயல்படுதிறன்: லோட்டஸ் எலெட்ரே காரின் டாப் ஆர் வேரியண்ட் ஆனது உலகிலேயே அதிவேகமான ட்யூயல்-மோட்டார் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 265kmph வேகத்தில் இயங்கலாம். லோட்டஸ் எலெட்ரே ஆர் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.95 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ரேஞ்ச் & சார்ஜிங்: பெரிய அளவில் 112kWh திறனில் பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதால், இந்த காரின் ஸ்டார்ண்டர்ட் மற்றும் எஸ் வேரியண்ட்களில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட்டு, அதிகப்பட்சமாக 600கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இவை இரண்டிலும் சிங்கிள் மோட்டார் தான் வழங்கப்படுகிறது. ஆனால், விலைமிக்க ஆர் வேரியண்ட்டில் ட்யூயல் மோட்டார் செட்-அப் வழங்கப்படுகிறது.
இந்த வேரியண்ட்டில் கிடைக்கும் ரேஞ்ச் 490கிமீ மட்டுமே. அளவில் பெரியதான பேட்டரியை பெற்றாலும், லோட்டஸ் எலெட்ரே எஸ்யூவி காரின் பேட்டரியை 10%- 80% சார்ஜ் நிரப்ப வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்கிறது லோட்டஸ் நிறுவனம். ஆனால், இதற்கு நீங்கள் ராபிட் சார்ஜரை உபயோகப்படுத்த வேண்டுமாம்.

தொழிற்நுட்பம்: எலெட்ரே எலக்ட்ரிக் காரில் லோட்டஸ் நிறுவனத்தின் ஹைப்பர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த எலக்ட்ரிக் காரில் 'அன் ரியல் என்ஜின்' தொழிற்நுட்பத்தையும் லோட்டஸ் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. இந்த காரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், கஸ்டமைஸ் செய்யக்கூடிய டிஸ்பிளேஸ், அட்வான்ஸ்டு டிரைவர் தகவல் மாடுலே மற்றும் 15.1-இன்ச் ஃபுல்-எச்டி OLED டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான விலையுயர்ந்த கார்கள் நம் நாட்டிற்கு தேவையா என்றால், தேவை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான கார்களை வாங்குவோர் நம் நாட்டில் அதிக பேர் இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் ஒருவர் வாங்கினாலே, குறிப்பிட்ட காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான எலெட்ரே கார்களை லோட்டஸ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications









