இது காரா இல்ல ஃபிளைட்டா? இவ்வளவு டெக்னாலஜி இருக்குது! வேற லெவல் லோட்டஸ் கார்!

லோட்டஸ் கார்ஸ் (Lotus Cars) நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காராக ரூபாய் 3 கோடி மதிப்பிலான எலக்ட்ரி என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் இன்று தான் முதன்முதலாக இந்தியாவில் கால் அடித்டளத்தை பதித்து வைத்து இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் குறித்தும் இந்த கார் குறித்தும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவை சேர்ந்த கீலீ (geely) என்ற நிறுவனம் லோட்டஸ் கார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த லோட்டஸ் கார்ஸ் நிறுவனம் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஆகும். அங்கு இந்நிறுவனம் அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது முதல் முறையாக இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்த லோட்டஸ் கார்ஸ் நிறுவனம் கடந்த 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

lotus eletre suv launched

இந்த லோட்டஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் காலடிதடத்தை வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான புதிய அத்தியாயத்தை துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லோட்டஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் தயாரிப்பை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எலக்ட்ரி என்ற எலக்ட்ரிக் ஹைப்பர் எஸ்யூவி காரை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எலக்ட்ரி காரைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்கள் உள்ளது. எலக்ட்ரி (Eletre), எலக்ட்ரி எஸ் (Eletre S) மற்றும் எலக்ட்ரி ஆர் (Eletre R) ஆகிய வேரியன்ட்கள் உள்ளது அதில் இரண்டு விதமான பவர் ஆப்ஷன்கள் உள்ளன. எலக்ட்ரி மற்றும் எலக்ட்ரி எஸ் ஆகிய வேரியன்ட்களில் 430 கிலோ வாட் அல்லது 63 எச்பி சிங்கிள் ஸ்பீடு வெர்ஷன் மோட்டார் உள்ளது.

lotus eletre suv launched

இது சிங்கிள் சார்ஜில் 600 கிலோ மீட்டர் வரை பயணிக்க உதவும் எலக்ட்ரி ஆர் காரைப் பொறுத்தவரை அந்நிறுவனத்தின் பிளாக்ஷீப் காராக இருக்கிறது. இந்த காரில் 675 கிலோ வாட் மோட்டார் உள்ளது. இது சிங்கிள் சார்ஜில் 490 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என கூறப்படுகிறது.

டார்க்கை பொறுத்தவரை எலக்ட்ரி மற்றும் எலக்ட்ரி எஸ் ஆகிய வேரியன்ட்கள் 710 என்எம் டார்க்கையும், எலக்ட்ரி ஆர் வேரியன்டில் 985 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. வேகத்தை பொறுத்தவரை எலக்ட்ரி மற்றும் எலக்ட்ரி எஸ் வேரியன்ட் கார் 0-100 கிமீ வேகத்தை 4.5நொடியிலும் எலக்ட்ரி ஆர் வேரியன்ட் 2.95 நொடியிலும் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 112 கிலோவாட்ஹவர் பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது.

lotus eletre suv launched

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10-80 சதவீதம் சார்ஜ் ஏற வெறும் 20 நிமிடம் தான் எடுத்துக் கொள்ளும். லோட்டஸ் நிறுவனம் இந்த காரில் உள்ள கேபின் பகுதியை டிஜிட்டல் கார்பெட் பகுதியாக வடிவமைத்துள்ளது. இதிலுள்ள தொழில் நுட்பங்கள் எல்லாம் லோட்டஸ் ஹைப்பர் ஒஎஸ் என்ற பிரத்தியேக இயங்கு தளத்தில் இயங்குகிறது. முக்கியமாக "அன்ரியல் இன்ஜின்" என்ற கேமிங் தளத்தில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் காருக்குள்ளே ரியல் டைம் 3டி அனுபவத்தை தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக குவால்காம் 8155 சிஸ்டம் ஆன் சிப்ஸ் ஹார்டுவேர் வழங்கப்பட்டுள்ளது. இதன் வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈசிஏஆர எக்ஸ் நிறுவனத்தின் சிப் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவான பிராசஸ் கிடைக்கும். மேலும் இதை ஒடிஏ மூலம் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

lotus eletre suv launched

இந்த காரின் ஆடியோ சிஸ்டத்தை பொருத்தவரை டால்பி அட்மாஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் 5 விதமான டிரைவ் மோடுகள், ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன், டார்க் வெக்டாரிங், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், முன்பக்க ஆக்டிவ் கிரில் மற்றும் 22 இன்ச் கொண்ட 10 ஸ்போக் வீல் ஆகியன உள்ளன.

மேலும் இந்த காருக்கு உட்புறம் பிரீமியம் கேபின் வழங்கப்பட்டுள்ளது வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் 12 விதமான எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் சீட்டுகள், நான்கு ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கால்பிளே சப்போர்ட் செய்யக்கூடிய ஆடியோ சிஸ்டம் இருக்கிறது.

மேலும் காருக்கு மத்தியில் 15.1 இன்ச் கொண்ட ஓஎல்இடி சென்டர் ஸ்கிரீன் இருக்கிறது. இந்த காரில் 5 சீட் கொண்ட வெர்ஷன் ஸ்டாண்டர்ட்டாகவும் நான்கு சீட்டு வெர்ஷன் எக்ஸிக்யூட்டிவ் சீட் பேக் உடனும் இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் ரைடர் தொழில்நுட்பம் இருக்கிறது. உலகின் முதல் முறையாக ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்தில் இது இயங்கும் திறன் கொண்டது. இந்த காரின் விலை பொருத்தவரை 22 இன்ச் வீல் ஸ்டாண்டர்ட்டாகவும் 20 மற்றும் 23 ஆகிய ஆப்ஷன்களும் இருக்கின்றன.

மேலும் ஐந்து விதமான வீல் டிசைன்களும் ஆறு நிறங்களில் பிரேக் காலிபர்களும் உள்ளன. இந்த காரின் வெளிப்புற கலரை பொறுத்தவரை நேட்ரோன் ரெட், கேலோவை கிரீன், கைமு க்ரே, ஸ்டெல்லர் பிளாக், பிளாஸம் கிரே, சோலார் எல்லோ உள்ளிட்ட சில கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

மேலும் இந்த காரின் உட்புறத்திலும் ஆறு விதமான இன்டீரியர் ஆப்ஷன்கள் உள்ளன. அனைத்து இடங்களிலும் பிரீமியம் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு ஏற்றபடி வாடிக்கையாளர்களே தங்கள் காரை தங்களுக்கு பிடித்தபடி கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

இதற்காக டைனமிக் ஹேண்டிலிங் பேக், செராமிக் பிரேக் பேக், எக்ஸிக்யூடிவ் சீட் பேக், கம்போர்ட் சீட் பேக், கார்பன் பைபர் பேக், எக்ஸ்டெண்டட் கார்பன் பைபர் பேக், இன்டீரியர் கார்பன் பைபர் பேக், உள்ளிட்ட ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் அடாஸ் தொழில்நுட்பத்தில் பார்க்கிங் பேக், ஹைவே அசிஸ்ட் பேக் என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரின் விலையை பொறுத்தவரை லோட்டஸ் எலக்ட்ரிக் கார் ரூபாய் 2.55 கோடி என்ற விலையிலும் லோட்டஸ் எலக்ட்ரி எஸ் கார் ரூபாய் 2.75 கோடி என்ற விலையிலும் லோட்டஸ் எலக்ட்ரி ஆர் கார் ரூபாய் 2.99 கோடி என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லோட்டஸ் நிறுவனம் எமிரா என்ற ஸ்போர்ட்ஸ் காரையும் 2024-ம் ஆண்டு வெளியிடப் போகிறது. இதை பொறுத்தவரை ஐ4 2.0லிட்டர் டர்போசார்ஜர் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 360எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த இஞ்சினுடன் டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இன்னொரு ஆப்ஷனாக வி6 சூப்பர்சார்ஜர் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது மேனுவல்,ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 16:45 [IST]
English summary
Lotus eletre suv launched india rs2 99cr
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X