அந்த கார் நிறுவனம் இந்தியாவிற்கு வரப்போகுதா! இந்த பேருக்காகவே எல்லாரும் ஷோரூம் வாசல்ல வரிசையில நிக்க போறாங்க!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் லோட்டஸ் (Lotus). இந்திய சந்தையில் காலடி எடுத்து வைப்பதற்கு லோட்டஸ் நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது. அனேகமாக வரும் நவம்பர் 9ம் தேதி (November 9), இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப் (Dealership) புது டெல்லியில் (New Delhi) அமைக்கப்படவுள்ளது. இதற்காக எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் லோட்டஸ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய சந்தையில் ஆரம்பத்தில் 2 கார்களை லோட்டஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

அவை லோட்டஸ் எமிரா (Lotus Emira) மற்றும் லோட்டஸ் எலெட்ரீ (Lotus Eletre) ஆகியவை ஆகும். இதில், லோட்டஸ் எமிரா, ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தை சேர்ந்தது. கடந்த 2021ம் ஆண்டுதான் உலகளாவிய அளவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 3.5 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். மறுபக்கம் லோட்டஸ் எலெட்ரீ காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இன்னும் சொல்லப்போனால் இதுதான் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பவர் அவுட்புட் 600 பிஹெச்பி ஆக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வெறும் 3 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிலோ மீட்டர்களாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 100 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 600 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என லோட்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லோட்டஸ் நிறுவனத்தின் இந்திய வருகை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இது சாமானிய மக்களுக்கான நிறுவனம் அல்ல. இந்த நிறுவனத்தின் கார்கள் விலை (Price) கோடிகளில் இருக்கும் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.
எனவே இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் (Film Stars) மற்றும் தொழில் அதிபர்கள் (Businessman) போன்றவர்களால் மட்டுமே லோட்டஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க முடியும். இந்தியாவின் செல்வந்தர்கள் லோட்டஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கும் செய்திகளை உங்களுக்கு வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.


Click it and Unblock the Notifications








