Cars With Rear AC Vents... இந்த கார்கள்ல பின் சீட்டுல ஒக்காந்து போனாலும் ஃப்ரிட்ஜ்ல இருப்பதை போல உணருவீங்க!
இந்தியாவில் கோடை வெயில் படுமோசமானதாக உள்ளது. இதன் விளைவாக மதிய நேர பயணம் இயலாத ஒன்றாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, டூ-வீலர்களில் பயணிப்பதை பலர் வெறுக்கவேத் தொடங்கிவிட்டனர். மேலும், பலர் தங்களது பயண நேரங்களையே கடும் வெயிலின் காரணமாக மாற்றி அமைத்து வருவதையும் நம்மால் காண முடிகின்றது.
ஒரு சிலர் தங்களது பயணங்களுக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் கார்களில் தங்களின் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர். இதேபோல், நீங்களும் வெயில் உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக டூ-வீலரை தவிர்த்துவிட்டு, காரை தேட ஆடம்பித்திருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் நிச்சயம் அனைவருக்கும் நல்ல குளிர்ச்சியான காற்றை வழங்கும் ஏசி வசதிக் கொண்ட காரை வாங்குவதே நல்லது ஆகும்.

இதுவே இப்போதைய நிலவரப்படி இந்தியாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் கோடை வெயில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். குறிப்பாக, உங்களது அனைத்து நேர பயணங்களையும் அது சுவாரஷ்யமானதாக மாற்றும். இந்தியாவில் ஒரு சில கார்களில் பின் பக்கத்திற்கு என தனி ஏசி வெண்ட் வழங்கப்படுவதில்லை.
அதேவேளையில், சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் மலிவு விலைக் கொண்ட கார் மாடல்களிக்கூட பின் பக்கத்தில் ஏசி வெண்ட் வசதியை வழங்குகின்றன. அத்தகைய கார் மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மலிவு விலையில் பின்பக்கத்தில் ஏசி வெண்டுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் எவை?, அவற்றின் விலை என்ன என்பது பற்றிய தகவலைக் காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்: நம்முடைய இந்த பட்டியலில் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான பின்பக்கத்தில் ஏசி வெண்ட் வச்ச கார் மாடலாக ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.63 லட்சம் ஆகும். அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் மக்னா எனும் வேரியண்டிலேயே ரியர் ஏசி வெண்ட் வசதி வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் அவுரா: இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அடுத்த ஒரு மலிவு விலை ரியர் ஏசி வெண்ட் வசதிக் கொண்ட கார் மாடலாக அவுரா இருக்கின்றது. இந்து ஓர் காம்பேக்ட் செடான் ரக கார் மாடலாகும். இந்த மாடலின் எஸ் வேரியண்டிலேயே பின் பக்க பயணிக்களுக்கான ஏசி வெண்ட் வசதி வழங்கப்படுகின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 7.18 லட்சம் ஆகும்.
மாருதி சுஸுகி டிசையர்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகக் கூடிய ஹேட்ச்பேக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்டிலேயே பின் பக்க பயணிகளுக்குமான ஏசி வெண்ட் வசதி வழங்கப்படுகின்றது. இந்த வசதி மட்டும் இல்லைங்க பின் பக்க பயணிகளை மையப்படுத்தி இன்னும் பல அம்சங்களை மாருதி இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ.7.44 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் ஐ20: ஹூண்டாய் நிறுவனம் இந்த கார் மாடலிலும் பின் பக்க பயணிகளுக்கான ஏசி வெண்ட் வசதியை வழங்குகின்றது. இந்த மாடல் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், அதன் அனைத்து வேரியண்டுகளிலும் பின் பக்கத்திற்கான ஏசி வெண்ட் வசதி வழங்கப்படுகிறது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ஆகும். எனவேதான் இந்த காருக்கு டிமாண்ட் பலமடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. இதன் விலை ரூ. 7.46 லட்சம் ஆகும்.
ரெனால்ட் ட்ரைபர்: இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக கார் இதுவாகும். இந்த கார் மாடல் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்டது ஆகும். இதன் இரண்டாவது வரிசை இருக்கைக்கு மட்டுமின்றி மூன்றாம் வரிசை இருக்கைக்கும் ஏசி வெண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ட்ரைபரின் ஆர்எக்ட் வேரியண்டிலேயே இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கும். இதன் விலை ரூ. 7.61 லட்சம் ஆகும்.
கியா சொனெட்: கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடல்களில் இந்த சொனெட்டும் ஒன்றாகும். இந்த காரில் கியா நிறுவனம் பன்முக சிறப்பு வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அது வழங்கி இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் பின் பக்க இருக்கைகளுக்கான ஏசி வென்டும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் அனைத்து தேர்வுகளிலும் இந்த வசதியை காண முடியும். இதன் விலை ரூ. 7.79 லட்சம் ஆகும்.
ரெனால்ட் கைகர்: இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார் மாடல்களிலும் இதுவும் ஒன்றே. ஆனால், இந்த கார் மாடலில் பின் பக்கத்தில் ஏசி வச்ச வேண்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் எனில், அதற்காக ரூ. 7.92 லட்சம் வரை செலவிட வேண்டும். இந்த மாடலின் ஆர்எக்ஸ்டி வேரியண்டிலேயே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா: மாருதி சுஸுகி இந்த கார் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் ரியர் ஏசி வெண்ட் வசதியை வழங்குகின்றது. இந்த எஸ்யூவி காரை ரூ. 8.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

டாடா அல்ட்ராஸ்: இந்தியாவின் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடலாக இந்த அல்ட்ராஸ் இருக்கின்றது. அதேவேளையில் இதில் பாதுகாப்பு வசதிகளும் மிக தாரளமாக வழங்கப்பட்டு இருக்கும். இதன் எக்ஸ்இசட் வேரிண்டிலேயே ரியர் பகுதிக்கான ஏசி வென்ட் வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 8.40 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே கார் உற்பத்தியாளர்கள் பின் பக்க பயணிகளுக்கும் மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற நோக்கில் ரியர் ஏசி வென்டை வழங்கி வருகின்றன. இதுபோன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மேலே பார்த் கார் மாடல்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









