2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தற்போது சந்தையில் போட்டு அதிகம் என்பதால் அதனைச் சமாளிக்க சிறந்த யுக்தியாக வாகன உற்பத்தியாளர்கள் இதனை கருதுகின்றனர்.
வாகன உற்பத்தியாளர்கள் வழங்கக் கூடிய மிக முக்கியமான சலுகைகளில் ஒன்றே ஜீரோ டவுண்பேமென்ட் அல்லது மிகக் குறைவான டவுண்பேமென்ட் திட்டம் இருக்கின்றது. இந்த பதிவில் நாம் மிகக் குறைவான டவுண்பேமென்டில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான டவுண்பேமென்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச்
டாடா நிறுவனத்தின் மலிவு விலை எஸ்யூவி ரக கார் மாடலில் பஞ்ச்-ம் ஒன்று. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 5.97 லட்சம் ஆகும். இந்த கார் மாடலின் ப்யூர் வேரியண்டையே டாடா மோட்டார்ஸ் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான முன் தொகையில் விற்பனைக்கு வழங்குகின்றது. நீங்கள் இந்த தொகையை டவுண்பேமெண்டாக செலுத்தி பஞ்ச் காரை வாங்கும்பட்சத்தில் மாதம் 7 ரூபாய் வரை மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்கும். 7 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிஸான் மேக்னைட்
நிஸான் நிறுவனத்தின் மலிவு விலை எஸ்யூவி ரக கார் மாடல் இது ஆகும். இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 5.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். ரூ. 6.5 லட்சம் வரையில் இருக்கலாம். இத்தகைய விலைக் கொண்ட காரையே ரூ. 2 லட்சம் டவுண்பேமென்டில் நிஸான் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டு லட்ச ரூபாயை முன்தொகையாக செலுத்தும்பட்சத்தில் மாதம் 7 ஆயிரம் ரூபாய் என 7 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு மலிவு விலை கார் மாடல் ஆகும். இது ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 6.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலைக் கொண்ட காருக்கே ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான முன் தொகையாக நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை செலுத்தும்பட்சத்தில் மாதம் ரூ. 7,128-ஐ 7 ஆண்டுகளுக்கு இஎம்ஐ-யாக செலுத்த வேண்டி இருக்கும்.
ஹூண்டாய் வென்யூ
இந்தியாவில் ரூ. 3 லட்சம் என்கிற குறைவான டவுண்பேமெண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார் மாடலில் வென்யூவும் ஒன்று. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 7.61 லட்சம் ஆகும். ஆன்-ரோடில் இதன் மதிப்பு ரூ. 8.4 லட்சம் ஆகும். ஒரு சில விற்பனையாளர்கள் ரூ. 2 லட்சம் வரையிலான குறைவான முன்தொகையில் வென்யூவை விற்பனைக்கு வழங்குகின்றனர். 3 லட்ச ரூபா முன்தொகையைக் கொடுத்து இந்த காரை வாங்கும்பட்சத்தில் ரூ. 8,552 வரை மாத இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். 7 வருடங்களுக்கான இஎம்ஐ திட்டமே இதுவாகும்.

கியா சொனெட்
இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் சொனெட்டும் ஒன்று. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் ரூ. 7.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆன் ரோடு மதிப்பு ரூ. 8.5 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதை 7 வருடங்கள் மாத தவணை திட்டத்தில் வாங்கச் செல்லும்போது ரூ. 8,710 வரை நாம் மாத தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். மேலும், முன் தொகையாக ரூ. 3 லட்சம் வரை செலுத்தினாலே போதும்.
டாடா நெக்ஸான்
இந்தியாவின் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 7.69 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 8.6 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதை ரூ. 3 லட்சம் முன் தொகையில் வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு வாங்கும்பட்சத்தில் ஏழு வருடங்களுக்கு ரூ. 8,868 மாதத் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடலில் நெக்ஸானும் ஒன்றாகும்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
மா்ருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் பிரெஸ்ஸாவும் ஒன்று. இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 7.99 லட்சம் ஆகும். எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 8.90 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த காரை ரூ. 3 லட்சத்தை முன் தொகையாக செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். இந்த முன் தொகையை செலுத்தும்பட்சத்தில் மாதம் ரூ. 9,502 என 7 ஆண்டுகளுக்கு தவணை செலுத்த வேண்டி இருக்கும்.
குறிப்பு, மேலே பார்த்த அனைத்து விலை விபரங்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும். இதேபோல், இந்த விலைகள் மற்றும் தவணைகள் அனைத்தும் அந்தந்த கார் மாடல்களின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும். அதேவேளையில், கணிசமான தொகை கூடவோ, குறையவோக் கூட கூடும் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








