விலை இலட்சக்கணக்கில் இருந்தாலும், மைலேஜ் பயங்கரமா கிடைக்கும்!! சொகுசு கார்களிலேயே இவை தான் பெஸ்ட்!

இந்தியாவில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பல்வேறு விதமான பிராண்ட்களில் இருந்து தற்சமயம் விற்பனையில் உள்ளன. சொகுசு கார்களின் சிறப்பம்சமே அவற்றின் அட்டகாசமான ஏரோடைனாமிக்ஸுக்கு ஏற்ற உடலமைப்பும், கவர்ச்சிக்கரமான உட்புற கேபினும் தான். அதேபோல், சொகுசு கார்களில் பவர் அவுட் மற்றும் செயல்படுதிறனிலும் எந்தவொரு குறையும் இருக்காது.

ஆனால், சொகுசு கார்களில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள் ஒன்று, குறைந்த மைலேஜ் ஆகும். காரின் அதிகமான எடை மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் என குறைந்த மைலேஜுக்கு பல விதமான காரணங்கள் உள்ளன. இதனாலேயே, பெட்ரோல்/ டீசல் விலையை பற்றி கவலைப்படாதவர்களே சொகுசு கார்களை வாங்குகின்றனர். இருப்பினும், இந்தியாவில் 20kmpl-க்கு மேல் மைலேஜ் தரக்கூடிய 5 சொகுசு கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

over 20kmpl mileage luxury cars

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கிரான் லிமௌசைன் (BMW 3-Series Gran Limousine): பிஎம்டபிள்யூவின் விலை உயர்ந்த செடான் காரான 3-சீரிஸ் கிரான் லிமௌசைனில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 184 எச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் மூலமாக கார் 20.37kmpl வரையிலான மைலேஜை பெற முடிகிறது.

over 20kmpl mileage luxury cars

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series): இந்த சொகுசு பிஎம்டபிள்யூ காரிலும் மேற்கூறப்பட்ட அதே 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இருப்பினும், 5-சீரிஸில் சற்று கூடுதலாக 20.87kmpl வரையிலான மைலேஜை பெறலாம். இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.68.90 இலட்சமாக உள்ளது.

over 20kmpl mileage luxury cars

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் (Mercedes-Benz C-Class): பிஎம்டபிள்யூ 3-சீரிஸுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் மெர்சிடிஸ் காரான சி-கிளாஸில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 194 எச்பி மற்றும் 440 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் மூலமாக இந்த பென்ஸ் காரில் 23kmpl வரையிலான மைலேஜை பெறலாம். இந்த மெர்சிடிஸ் செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.60 இலட்சமாக உள்ளது.

over 20kmpl mileage luxury cars

லெக்ஸஸ் இ.எஸ்300எச் (Lexus ES 300h): இது ஓர் லக்சரி ஹைப்ரீட் கார் ஆகும். இந்த லெக்ஸஸ் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இவை இரண்டின் மூலமாக அதிகப்பட்சமாக 173 எச்பி மற்றும் 221 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை கார் பெறுகிறது. ஹைப்ரீட் காரான இதில் லிட்டருக்கு 23கிமீ வரையிலான மைலேஜை பெறலாம்.

over 20kmpl mileage luxury cars

டொயோட்டா காம்ரி (Toyota Camry): 2.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் மற்றொரு ஹைப்ரீட் கார். இந்த ஹைப்ரீட் சிஸ்டம் ஆனது 172 எச்பி மற்றும் 221 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகிறது. இந்த ஹைப்ரீட் காரின் மைலேஜும் 23kmpl ஆகும். ஆனால், இந்த டொயோட்டா கார் ரூ.46.17 லட்சம் என்கிற விலையிலேயே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சொகுசு கார்களை பல இலட்சங்கள் கொடுத்து வாங்குவோர், காரின் மைலேஜை பற்றி பெரியதாக சிந்திப்பதில்லை. ஆனால், பல்வேறு கனவுகளுடன் ஒரு சொகுசு காரை நீண்ட வருடங்களாக பணம் சேர்த்து வைத்து வாங்குகிறீர்கள் எனும்போது, மைலேஜை அதிகமாக பெற விரும்புவீர்கள். அத்தகையவர்கள் மேலே உள்ள கார்களில் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 19:16 [IST]
English summary
Luxury brands cars which have over 20 kmpl mileage check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X