இந்த கார்களின் உற்பத்தியை பிஎம்டபிள்யூ இந்தியால தொடங்க போகுதா! மாருதி கார்களைபோலவே இந்த கார்களும் சேல்ஸாகபோது!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் தற்போது உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட (ICE) கார்களின் உற்பத்தி பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அந்நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகளையும் நம் நாட்டில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் உற்பத்தி ஆலை நமது தமிழகத்திலேயே அமைந்திருக்கின்றது. இங்கு வைத்தே அதன் அனைத்து லக்சூரி கார் மாடல்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிற்கான வாகனங்களும் இங்கு வைத்தே தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய உற்பத்தி ஆலையிலேயே விரைவில் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களையும் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எக்ஸ்5 போன்ற பிரபலமான சொகுசு கார் மாடல்களையே சென்னை ஆலையில் வைத்து தயாரித்து வருகின்றது. இதன் வரிசையிலேயே நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இணைக்க இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. ஐ7, ஐஎக்ஸ், ஐ4 மற்றும் மினி எஸ்இ ஆகிய இ-கார்களே இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இவற்றின் உற்பத்தி பணிகளே விரைவில் நம் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன.

இவ்வாறு நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகளை உள்ளூர் மயமாக்குவதனால் கிடைக்க இருக்கும் பலன் என்ன என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம், நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விலை குறைய இருப்பதே அதனால் கிடைக்க இருக்கும் நன்மை ஆகும். இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் கார்கள் பெரும்பாலும் சிபியூ வாயிலாகவே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்படுகின்றன.
இத்தகைய வாகனங்களுக்கு மிக மிக அதிக வர இந்தியாவில் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே இ-கார்களின் உற்பத்தியை பிஎம்டபிள்யூ தொடங்கும் எனில் அந்த கார்களுக்கு தற்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் தவிர்க்கப்படும். ஆகையால், அதன் விலையும் குறையும். இதன் அடிப்படையிலேயே பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விரைவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், உடனே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை பிஎம்டபிள்யூ தொடங்கப்போவதில்லை, அந்த பணிகள் தொடங்க இன்னும் சில காலங்கள் ஆகும் என கூறப்படுகின்றது. ஆனால், இதைத் தொடங்குவதற்கான சூழல் ஏற்கனவே உருவாகிவிட்டது. நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பெரும் சதவீத பங்கினை எலெக்ட்ரிக் கார்களே வகிப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதி விற்பனையில் 9 சதவீதம் பங்களிப்பை எலெக்ட்ரிக் கார்களே வகிக்கின்றன. இது 2025 ஆம் ஆண்டிற்குள் 25 சதவீதமாக மாறும் என நிறுவனம் யூகிக்கின்றது.
இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே பிஎம்டபிள்யூ அதன் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்திருக்கின்றார். சமீபத்திய பேட்டியின் வாயிலாகவே அந்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்புக் கணிசமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலை விலையைக் குறைப்பதோடு, அதன் விற்பனையையும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








