நம்ம இந்தியா ஏழை நாடே கிடையாதுங்க!! கோடி ரூபாய்களில், இந்த 2023இல் மட்டும் நிறைய கார் வந்திருக்கு!

பட்ஜெட் விலை கார்களுக்கே நம் நாட்டு சந்தை ஏற்றவை என்பது நமக்கு தெரியும். இருப்பினும், அதேநேரம் விலையுயர்ந்த கார்களும் ஒவ்வொரு வருடமும் கணிசமான எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த 2023 வருடத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த விலையுயர்ந்த கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto): இந்த வரிசையில் நாம் முதலாவதாக பார்ப்பதற்கு ஏற்ற கார் இது எனலாம். ஏனெனில், ரெவல்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.8.89 கோடியாக உள்ளது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த லம்போர்கினி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

luxury cars launches in 2023

ஃபெராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS): ஃபெராரி 296 ஜிடிபி காரின் கன்வெர்டபிள் வெர்சன் இதுவாகும். இந்த 2023ஆம் வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஃபெராரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ..6.24 கோடியாக உள்ளது. இந்த ஃபெராரி காரில் 3 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது.

luxury cars launches in 2023

மெக்லாரன் அர்டுரா (Mclaren Artura): மேலே கண்ட ஃபெராரி காரை போல், இது ஒரு ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும். இந்த 2023ஆம் வருடத்தின் துவக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.1 கோடியாகும். இந்த ஹைப்ரீட் காரில் 3 லிட்டர் ட்வின்-டர்போ வி6 என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது.

luxury cars launches in 2023

மஸராட்டி எம்சி20 (Maserati MC20): மத்தியில் என்ஜினை கொண்ட விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ்-ரக கார். இந்த காரில் 3-லிட்டர் ட்வின்-டர்போ வி6 என்ஜினை மஸராட்டி நிறுவனம் பொருத்துகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 630 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்கள் எதுவும் இந்த காரில் கிடையாது.

luxury cars launches in 2023

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 பெர்ஃபார்மன்ஸ் (Mercedes-AMG GT63 SE Performance): மெர்சிடிஸ் நிறுவனம் இந்த 2023இல் இந்தியாவில் அறிமுகப்படுத்திய மிக விலையுயர்ந்த கார் இதுவாகும். 4 கதவுகளை கொண்ட இந்த செயல்திறன்மிக்க சூப்பர் செடான் காரில் 4 லிட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அத்துடன், 400-வோல்ட் ஹைப்ரீட் உதவியையும் இந்த ஏஎம்ஜி கார் பெறுகிறது.

luxury cars launches in 2023

லோட்டஸ் எலட்ரே (Lotus Eletre): இந்தியாவின் முதல் லோட்டஸ் கார் இதுவாகும். முதல் காரையே எலக்ட்ரிக்கில் லோட்டஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 112kWh பேட்டரி தொகுப்புடன் விற்பனை செய்யப்படும் இந்த லோட்டஸ் கார் 2 விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஒரு ஆப்ஷனில் 600கிமீ ரேஞ்சும், 2வது ஆப்ஷனில் 490கிமீ ரேஞ்சும் கிடைக்கிறது.

luxury cars launches in 2023

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல்55 ரோட்ஸ்டர் (Mercedes-AMG SL55 Roadster): கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு பிரபலமான எஸ்.எல்55 ரோட்ஸ்டர் காரை மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்க ஆரம்பித்தது. இந்த 2023இல் மெர்சிடிஸ் அறிமுகப்படுத்திய 2வது ஏஎம்ஜி காரான இதன் விலை ரூ.2.35 கோடி என உள்ளது. இந்த காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

luxury cars launches in 2023

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா, லக்சரி கார்களுக்கும் ஏற்ற சந்தையாக ஒவ்வொரு வருடமும் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் நாம் பார்த்திருப்பவை அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டவை மட்டுமே. இன்னும் பல விலையுயர்ந்த லக்சரி காரக்ளும், ஸ்போர்ட்ஸ் கார்களும் இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, December 25, 2023, 19:47 [IST]
English summary
Luxury cars which launched in this 2023 check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X