டொயோட்டா மேல மரியாதை கூடிருச்சு! நமக்குதான் பெஸ்ட்டான கார் குடுத்துருக்காங்க! அந்த நாட்டு மக்கள் ஏமாற்றம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரை உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த வரிசையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் தற்போது தென் ஆப்ரிக்காவில் (South Africa) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க சந்தையில் வெறும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ஹைரைடர் என்ற வார்த்தை மிஸ்ஸிங்.

Toyota Urban Cruiser Hyryder

தென் ஆப்ரிக்க சந்தையில் இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை XS, XR மற்றும் XR AT ஆகும். வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலும், தென் ஆப்ரிக்க சந்தைக்கான மாடலும் கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் உள்ளன.

அதே சமம் இந்த காரின் உட்புறத்தை பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கமான ட்வின்-போட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் பெரிய எம்ஐடி இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியும் இந்த காரில் இருக்கிறது.

Toyota Urban Cruiser Hyryder Speedy Blue

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீலெஸ் எண்ட்ரி மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளையும் தென் ஆப்ரிக்க சந்தைக்கான டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் பெற்றுள்ளது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 360 டிகிரி கேமரா வசதிகள் வழங்கப்படவில்லை.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் கே-சீரிஸ் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.

இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே தென் ஆப்ரிக்க சந்தைக்கான டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 101 பிஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்க சந்தைக்கான டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. அதேபோல் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக உள்ளது. (Booking) செய்த நாளில் இருந்து, டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் சுமார் 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இது வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்கும் விஷயமாக உள்ளது. இந்திய சந்தைக்கான தேவையையே டொயோட்டா நிறுவனத்தால் இன்னும் சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவேதான் தென் ஆப்ரிக்க சந்தையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின், ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலை களமிறக்கவில்லை என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 8, 2023, 23:21 [IST]
English summary
Made in india toyota urban cruiser launched in south africa all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+