கிரிக்கெட் பத்தி மட்டும் பேசுங்கன்னு மக்களிடம் கொட்டு வாங்கிய தோனி! வேற எதைப் பத்தி பேசுனாரு தெரியுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார் டிரெண்ட் தான் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் இயங்குவதால் இந்த கார்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

அரசும் மாசுவை கட்டுப்படுத்த எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கிறது. ஏராளமான மக்கள் இந்த ரக வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் பத்தி மட்டும் பேசுங்கன்னு மக்களிடம் கொட்டு வாங்கிய தோனி! வேற எதைப் பத்தி பேசுனாரு தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் lightorium என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் மஹிந்திர சிங் தோனி எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் எலெக்ட்ரிக் வாகனங்கள் மாசுவை கட்டுப்படுத்த பயன்படாது எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்த வீடியோவில் அவர் " எலெக்ட்ரிக் வாகனங்கள் கார்பன் எமிஷன்களையும், கார்பன் ஃபூட் பிரிண்ட்களையும் குறைக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் எலெக்டரிக் வாகனங்களால் முழுமையாக அதைச் செய்ய முடியும் என நம்ப முடியவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள் மின்சக்தியில் இயங்குகிறது.

இந்த மின்சக்தி எப்படி தயாராகிறது? தெர்மல் பவர் பிளான்ட் மூலம் மின் சக்தி தயாரானால் அதிலிருந்தும் மாசு வெளியாகத்தான் செய்யும் அதன்பின் இதை எப்படி பசுமை வாகனங்கள் என நாம் கூற முடியும்? " எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவாகப் பல முடிவுகள் எடுக்கப்படுகிறது. அரசின் கொள்கைகளையே இதை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தோனி இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் பலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சில அவருக்கு சோலார் மூலம் மின் சக்தியை உருவாக்குவது பற்றித் தெரியாது என்றும், மற்றொருவர் தோனி தயவு செய்து கிரிக்கெட் பற்றி மட்டும் பேசும் படியும் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் கருத்திட்டு வருகின்றனர்.

ஆனால் மஹிந்திர சிங் தோனி சொன்ன இந்த விஷயம் சரியான ஒரு விஷயம் தான் தெர்மல் பவர் பிளான்டிலிருந்து அதிகமான கார்பன் வெளியேற்றம் நடக்கிறது. ஆனால் அதன் மூலம் எவ்வளவு வாகனங்கள் சார்ஜ் ஆகிறது. அது எவ்வளவு கார்பன் படிமங்கள் உருவாவதைக் குறைக்கிறது என்பதைக் கணக்கிட வேண்டும்.

எது எப்படியோ பெட்ரோல்/டீசல் வாகனங்கள் எல்லாம் அதிகமாக மாசுவை வெளிப்படுத்துகிறது. அதனால் அதற்கு மாற்று நிச்சயம் வேண்டும். அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த தேர்வு தான். மேலும் இது போக்குவரத்துக்கு ஆகும் செலவையும் குறைக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 12:40 [IST]
English summary
Mahendra singh dhoni Commented on Electric Vehicles future created a debate
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+