மஹிந்திராவை இனி கையில் பிடிக்க முடியாது!! காருக்கு உள்ளே இப்படி இருந்தா என்னங்க பண்ண முடியும்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் எதிர்கால பிஇ.05 ரால் இ (BE.05 Rall E) எலக்ட்ரிக் காரின் உட்பக்க கேபின் தோற்றத்தை படம் ஒன்றின் மூலமாக வெளியீடு செய்துள்ளது. இதன் மூலம், காரை பற்றிய சில விபரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

மற்ற நிறுவனங்களை போல், மஹிந்திராவும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் முழு கவனத்தை செலுத்த உள்ளது. இந்த வகையில், வருகிற 2025ஆம் ஆண்டில் பிஇ.05 ரால் இ என்ற அட்வான்ஸான தோற்றம் கொண்ட எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டு உள்ளது.

mahindra be.05 rall-e interior design

இந்த நிலையில், மஹிந்திரா பிஇ.05 ரால் இ எலக்ட்ரிக் காரின் உட்பக்க கேபின் இப்படித்தான் இருக்கும் என வெளிக்காட்டும் படம் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிஇ.05 ரால் இ ஆனது ஓர் கான்செப்ட் மாதிரியே ஆகும். அதாவது, 2025இல் வெளியீடு செய்யப்படும் எலக்ட்ரிக் காரின் தோற்றம் பிஇ.05 ரால் இ போல் இல்லாமல் இருக்கலாம்.

ஏனெனில், பிஇ.05 ரால் இ காரின் தோற்றத்திலும், தொழிற்நுட்பத்திலும் 2025ஆம் ஆண்டிற்குள் மஹிந்திரா பல்வேறு மேம்பாடுகளை கொண்டுவரும். இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள உட்பக்க கேபின் படத்தின் மூலம், பிஇ.05 ரால் இ எலக்ட்ரிக் காரின் கேபின் தோற்றம் மிகவும் கற்பனை திறனுடன் அட்வான்ஸான டிசைனில் இருப்பதை காண முடிகிறது.

mahindra be.05 rall-e interior design

குறிப்பாக, லூசிட் லைம்-இன் இளம் பச்சை நிறம் கேபின் முழுவதும் ஆங்காங்கே இருப்பது பார்ப்பதற்கு கவர்ச்சியாக உள்ளது. இந்த இளம் பச்சை நிறத்துடன் கருப்பு & சில்வர் நிறங்களும் காரின் கேபின் அலங்கரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரால் இ காரில் உட்பக்கத்தில் கவனிக்கத்தக்க அம்சம் என்று பார்த்தால், 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை சொல்லலாம்.

ஸ்டேரிங் சக்கரத்துக்கு மத்தியில் 'BE' என்ற காரின் பெயரை குறிப்பிடும் லோகோ வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்டேரிங் சக்கரத்தில் எந்தவொரு பொத்தானும் இருப்பதுபோல் தெரியவில்லை. இதனால், டச் மூலமாக செயல்படக்கூடிய கண்ட்ரோல்கள் ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்படலாம். ஸ்டேரிங் சக்கரத்துக்கு முன்புறமாக, ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் திரை உள்ளது.

mahindra be.05 rall-e interior design

இந்த திரைக்கு அருகே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான திரை உள்ளது. ஆனால் உண்மையில் இவை எல்லாவற்றையும் விட, தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தில், காரின் டேஸ்போர்டை இரண்டாக பிரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தடுப்பு போன்றதான அமைப்பு பார்ப்போருக்கு ஓர் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது. ஓட்டுனரை முன் இருக்கை பயணியிடம் இருந்து பிரிக்கும் வகையில் இந்த தடுப்பு உள்ளது.

அதேபோல், செண்டர் கன்சோல் பகுதியும் அளவில் பெரியதாக நம்மை கவர்கிறது. செண்டர் கன்சோல் பகுதியில் குஷினும் வழங்கப்பட்டுள்ளதால், இதனை கை தலையணையாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கியரை மாற்றும் கியர் லிவரின் டிசைனின் விமானங்களில் வழங்கப்படுவதை போன்று உள்ளது. கேபினின் இந்த தோற்றத்திற்கு ஏற்ப பிஇ.05 ரால் இ எலக்ட்ரிக் காரின் வெளிப்பக்கத்தையும் முரட்டுத்தனமான தோற்றத்தில் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா இத்தனை வருடங்களில் கார்கள் வடிவமைப்பில் கற்றுக் கொண்ட நுட்பங்கள் அனைத்தையும் பிஇ.05 எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தி உள்ளது என்பதை இந்த படத்தை பார்க்கும்போது தெரிகிறது. இதனால், 2025இல் வெளியீடு செய்யப்பட உள்ள இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பார்ப்போம்... இறுதியாக இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் எவ்வாறு இருக்கும் என்று...

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2023, 21:00 [IST]
English summary
Mahindra be 05 rall e interior design unveiled
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X