2 டன் எடையை அசால்ட்டா சுமந்து செல்லும்... மஹிந்திராவின் புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் டிரக்குகள் அறிமுகம்!!

புதிய மஹிந்திரா பொலேரோ மேக்ஸ் (Mahindra Bolero MaXX) பிக்-அப் ட்ரக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மஹிந்திரா பிக்-அப் ட்ரக்குகளை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்கள் மட்டுமின்றி, கமர்ஷியல் பயன்பாட்டிற்கான வாகனங்களையும் விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் விளங்குகிறது. மஹிந்திரா நிறுவனம் குறிப்பாக தனது பிரபலமான பொலேரோ பெயரை பரவலாக தனது கமர்ஷியல் வாகனங்களுக்கு பயன்படுத்துகிறது. பொலேரோ பெயரில் மட்டும் 3 பிக்-அப் ட்ரக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வரிசையில் 4வது பொலேரோ பிக்-அப் ட்ரக் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

mahindra all-new bolero maxx pik-up range

பொலேரோ மேக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிக்-அப் ட்ரக் வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிக்-அப் ட்ரக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் சுமார் 2 டன் வரையிலான சுமைகளை ஏற்றி செல்ல முடியும். இதற்காகவே 3050மிமீ-இல் நன்கு நீளமான கார்கோ படுக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் ட்ரக் வாகனத்தை வாடிக்கையாளர்கள் அளவில்-சிறியதாகவும் வாங்க முடியும். அதாவது, 2 டன் இல்லாமல், 1.3 டன் வரையிலான எடையை மட்டுமே சுமக்கக்கூடிய வெர்சனில் இருந்தே பொலேரோ மேக்ஸ் பிக்-அப் ட்ரக்கை வாங்கலாம். 1.3 டன் வரையிலான எடையை சுமக்கக்கூடிய புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் ட்ரக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.7.85 லட்சம் ஆகும். அதிகப்பட்சமாக ரூ.10.33 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்த பிக்-அப் ட்ரக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

அதேபோன்று இந்த புதிய மஹிந்திரா பிக்-அப் ட்ரக்கை எச்டி சீரிஸ் மற்றும் சிட்டி சீரிஸில் தேர்வு செய்யலாம். இதில் சிட்டி சீரீஸில் சிஎன்ஜி தேர்வில் இந்த வாகனம் கிடைக்கும். புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் ட்ரக்கை முன்பதிவு செய்வதற்கான முன்தொகையாக ரூ.24,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிக்-அப் ட்ரக்கை வெள்ளை அல்லது கோல்டு பெயிண்ட்டில் பெற முடியும். கோல்டு பெயிண்ட் தேர்விற்கு கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.

புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் ட்ரக்கில் மஹிந்திராவின் அட்வான்ஸ்டு எம்2டிஐ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் மூலம் கிடைக்கப்பெறும் அதிகப்பட்சமாக இயக்க ஆற்றல் அளவுகள் வாகனம் சுமக்கும் அதிகப்பட்ச சுமையின் அளவை பொறுத்து வேறுப்படும். அதாவது 1.3 டன் சுமையை சுமக்கும் வெர்சனில் 52.2 கிலோவாட்ஸ் & 200 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும். அதுவே 2 டன் வெர்சனில் சற்று கூடுதலாக 59.7 கிலோவாட்ஸ்/ 220 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கும்.

தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், ஐமேக்ஸ் கனெக்டட் வசதி இந்த புதிய பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகனம் எங்கு உள்ளது என்பதை உரிமையாளர்கள் தங்களது மொபைல் போன் மூலமாக கண்டறியலாம். இதற்காக மஹிந்திரா உருவாக்கியுள்ள ஐமேக்ஸ் மொபைல் செயலியை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற மொழியில் பயன்படுத்த முடியும். இந்த மொபைல் இணைப்பு வசதியுடன் 50க்கும் மேற்பட்ட வசதிகளையும் மஹிந்திரா புதிய பொலேரோ பிக்-அப் ட்ரக்கில் வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார்கள் சந்தையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகன சந்தையில் பொலேரோ பெயர் பிரபலமானதாக விளங்குகிறது. இதன் காரணமாகவே தொடர்ச்சியாக இந்த பெயரில் புதிய புதிய பிக்-அப் ட்ரக்குகளை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. மற்ற பொலேரோ பிக்-அப் ட்ரக் வாகனங்களை போன்று, புதிய மேக்ஸ் பிக்-அப் ட்ரக்குகளும் சந்தையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 17:02 [IST]
English summary
Mahindra bolero maxx pik up truck range launched
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+