உண்மையான அமெரிக்க ஜீப் வ்ராங்க்லர் வாகனமே தோற்றுவிடும்... இது எந்த வாகனம் என்று கண்டுப்பிடிக்க முடிகிறதா!!
இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 4x4 எஸ்யூவி கார்களுள் மஹிந்திரா தார் ஒன்று எனலாம். இந்தியாவில் தார் என்றால், உலகளவில் அமெரிக்க ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான ஜீப் வ்ராங்க்லர். இந்தியாவை பொறுத்தவரையில், ஜீப் வ்ராங்க்லர் சற்று விலைமிக்கது. அதனை நம் நாட்டில் அனைவராலும் வாங்க முடிவதில்லை.
இருப்பினும் சிலர் வேறு மாதிரியாக யோசித்து ஜீப் வ்ராங்க்லர் போன்றதான வாகனத்தை பெறுகின்றனர். அதாவது, தங்களது வாகனத்தை வ்ராங்க்லருக்கு இணையாக மாடிஃபை செய்து கொள்கின்றனர். அவ்வாறு ஜீப் வ்ராங்க்லர் போன்று மாடிஃபை செய்யப்பட்ட மஹிந்திரா பொலேரோ காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்த மாடிஃபைடு வாகனம் குறைத்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
கடந்த தலைமுறைகளில் மஹிந்திரா தார் வாகனமே ஜீப் வ்ராங்க்லர் போன்று பலரால் மாடிஃபை செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2020இன் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 2ஆம் தலைமுறை தார் கிட்டத்தட்ட வ்ராங்க்லர் போன்று உள்ளதால், அவ்வாறான மாடிஃபிகேஷன் வேலைகளை மேற்கொள்பவர்கள் குறைந்து விட்டனர். ஆனால் இங்கு ஒருவர் சற்று வித்தியாசமாக யோசித்து மஹிந்திராவின் மற்றொரு எஸ்யூவி காரான பொலேரோவை ஜீப் வ்ராங்க்லர் போன்று மாற்றியுள்ளார்.
உண்மையில், இந்த மஹிந்திரா பொலேரோ கார் எவர் ஒருவரையும் எளிதில் ஜீப் வ்ராங்க்லர் ரூபிகன் என்று ஏமாற்றக்கூடிய அளவிற்கு அருமையாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷனின் போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை மேலுள்ள வீடியோவில் விரிவாக கூறியுள்ளனர். இந்த மாடிஃபை வாகனத்தின் முன்பக்கத்தை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது.

இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் செங்குத்தான ஸ்லாட்களுடன் கஸ்டம் உலோக க்ரில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், க்ரில்லிற்கு மேலே 'jeep' பெயரில் லோகோ இடம்பெற்றிருப்பதையும் பார்க்க முடிகிறது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆனவை வளைவான எல்இடி டிஆர்எல்-கள் உடன் உதிரி பாக சந்தையில் இருந்து வாங்கப்பட்டதாக உள்ளது. டர்ன் இண்டிகேட்டர்கள் முன்பக்க க்ரில்லிற்கு கீழே பொருத்தப்பட்டுள்ளன.
பம்பர் முற்றிலுமாக உலோகத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இவற்றுடன் ஃபாக் விளக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாடிஃபை பொலேரோவில் பெரும்பாலான பேனல்கள் புதியதாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. பம்பரை போன்று முன்பக்க ஃபெண்டரும் உலோகத்தால் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. இதன் மீது 'Rubicon' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் பொனெட் லாக்கிங் கிளிப்களும் முன்பக்க ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளன.

பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளும் புதியவைகளாக, நிஜ வ்ராங்க்லர் ரூபிகன் வாகனத்தில் இருப்பதை போன்று உள்ளன. இவை எல்லாவற்றையும் முக்கிய அம்சமாக இந்த மாடிஃபை வாகனத்தில் 22-இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள், லோ-புரோஃபைல் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. 10 இன்ச் லிஃப்ட் தொகுப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதால், வழக்கமான பொலேரோவை காட்டிலும் இந்த மாடிஃபை பொலேரோ நன்கு உயரமானதாக காட்சியளிக்கிறது.
இந்த வாகனத்தின் பக்கவாட்டில் நம்மை வசீகரிக்கக்கூடிய மற்றொரு அம்சமாக மெட்டல் ராக் ஸ்லைடர் விளங்குகிறது. இவற்றுடன் பின்பக்க ஃபெண்டரும் அகலமானதாக கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாடிஃபை வாகனத்தை பார்க்கும் எவருக்கும் பொலேரோ சாயல் தெரியாது. மேற்கூரை ஆனது கூர்மையான எட்ஜ்களுடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் உலோக பம்பர் மற்றும் 22 இன்ச்சில் உதிரி சக்கரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








