காரில் சின்னதா ஒரேயொரு சேஞ்ச் தான்... மஹிந்திரா கார் ஓனரின் ஐடியா செம்ம!! 2005இல் உருவாக்குன காரா இது!
மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் ஒன்று இந்தியாவிலேயே முதல்முறையாக ஆற்றல்மிக்க, பெரிய அளவிலான வி8 என்ஜின் உடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பொலேரோ கார் குறித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய கார்களுள் ஒன்று பொலேரோ ஆகும். மஹிந்திராவின் மாடர்ன் கார் என சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் ரக்டான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுள் ஒன்று எனலாம். அத்துடன், அதிக பேர் வாங்க விரும்பும் கார்.

2000ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா பொலேரோ காரை அதன் உரிமையாளர்கள் மாடிஃபை செய்வதை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். ஆனால், அவை எதிலிலும் இல்லாத புதுமையாக, இந்தியாவில் முதல்முறையாக பொலேரோ கார் ஒன்றில் அளவில்-பெரிய வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மாடிஃபை பொலேரோ கார் குறித்த வீடியோ மாடிஃபைடு ஹப் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடிஃபைடு பொலேரோ காரை பார்ப்பதற்காக, வீடியோவை காட்சிப்படுத்தியவர் தனது மாருதி சுஸுகி ஜிம்னியில் செல்வதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. மாடிஃபை செய்யப்பட்ட பொலேரோ கார் இருக்கும் மெக்கானிக் கடையை அடைந்த பின் கடையின் உரிமையாளரும் அங்கு இருப்பதை வீடியோவில் காணலாம்.

கடையின் உரிமையாளருடன் சிறிய உரையாடலுக்கு பின் மாடிஃபைடு பொலேரோ காரை சென்று பார்வையிடுகின்றனர். மேலும், இந்தியாவில் வி8 என்ஜினை பெற்ற முதல் மற்றும் ஒரே மஹிந்திரா பொலேரோ இதுதான் என வீடியோவை காட்சிப்படுத்தியவர் கூறுவதை கேட்க முடிகிறது. இந்த பொலேரோ காருக்கான மாடிஃபை பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப சில பல உபகரணங்களுடன் கார் மேலும் மாடிஃபை செய்யப்பட உள்ளதாக மெக்கானிக் ஷாப்பின் உரிமையாளர் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆதலால், இந்த பொலேரோ கார் இனி தோற்றத்தில் மெருக்கேற்றப்பட உள்ளது. அதாவது, ஆற்றல்மிக்க வி8 என்ஜினிற்கு இணையாக வாகனத்தின் தோற்றத்தை மேலும் ரக்டாக காட்ட முயல்வர். ஆனால், தற்போதைக்கு இந்த பொலேரோவின் முக்கிய சிறப்பம்சம் அதன் அளவில்-பெரியதான வி8 என்ஜின் ஆகும்.

வீடியோவில், காரின் என்ஜின் அமைப்பில் 8 சிலிண்டர்கள் உள்ளதை காணலாம். அதன்பின், ஓட்டுனர் பக்கத்தில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள எக்ஸாஸ்ட் குழாயையும் இந்த வீடியோவில் காண முடிகிறது. அதேபோல், காரின் மறுபக்கத்திலும் ஒரு எக்ஸாஸ்ட் குழாய் உள்ளது. இந்த மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது 2005இல் உருவாக்கப்பட்ட மஹிந்திரா பொலேரோ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவியை மாடிஃபை செய்வது எளியது என்பதால், சமீப காலங்களில் எஸ்யூவி கார்கள் அதிகளவில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், இந்த மஹிந்திரா பொலேரோ கார் வி8 என்ஜினை பெற்றுள்ளது. தற்போதைக்கு காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2005இல் உருவாக்கப்பட்ட பொலேரோ கார் எப்படி இருக்குமோ அவ்வாறுதான் உள்ளது. ஆனால், மிக விரைவில் இந்த பொலேரோவின் தோற்றம் மெருக்கேற்றப்பட உள்ளதை இங்கு மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications









