பெரிய பெரிய குடும்பங்களுக்கு ஏத்த காரை சோதனை ஓட்டம் செய்து வரும் மஹிந்திரா.. இத்தன பேரு வர தாராளமா ஒக்காரலாமா!

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் டியூவி 300 (TUV300)-ம் ஒன்று. இந்த மாடலையே ஹெவியாக அப்டேட் செய்து மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ (Bolero Neo) எனும் புதிய பெயரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய பெயருக்கு ஏற்ப புதிய அவதாரமும் இந்த காருக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரையே மீண்டும் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே தயார்நிலையில் இருக்கும் அப்டேட்டட் பொலிரோவை நிறுவனம் தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு சாலையில் பலபரீட்சையில் ஈடுபட்டு வந்த புதிய பொலிரோ நியோவின் ஸ்பை படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

பொலிரோ

புதிய பெயர், புதிய அவதாரம்

ஸ்பை படங்களுடன் சேர்த்து புதிய பொலிரோ நியோ பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் சிலவும் வெளியாகி இருக்கின்றன. பொலிரோ நியோ பிளஸ் (Mahindra Bolero Neo Plus) எனும் புதிய பெயரிலேயே புதிய வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இத்துடன் இரு விதமான இருக்கை தேர்வுகளிலும் அது விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

ஒன்பது பேர் வர தாராளமா ஒக்காந்து போகலாம்

7 அல்லது 9 இருக்கைகள் எனும் தேர்விலேயே புதிய பொலிரோ நியோ பிளஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக புதிய பொலிரோ நியோ பிளஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 9 இருக்கைகள் எனும் மிக அதிக இருக்கை வசதி உடன் பொலிரோ நியோ பிளஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

பொலிரோ

ஸ்டைலைகூட மாத்தியிருக்காங்க

அதேவேளையில் அதிக இட வசதியும் இந்த காரில் இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பொலிரோ நியோவைக் காட்டிலும் புதிய ஒன்று கூடுதல் பெரிய உருவம் கொண்டதாக அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே, அதன் அதிக இட வசதி மற்றும் கூடுதல் இருக்கை தேர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர இதன் ஸ்டைலிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் புதிய அம்சமாக வலை போன்ற கிரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட குரோம் ஸ்லேட்டுகள் உடன் கூடிய கிரில்லே முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ஏர் டேம், பின் பக்கத்தில் ஸ்பேர் வீல், கவர்ச்சிகரமான டெயில் லைட் ஆகியவை பொலிரோ நியோ பிளஸ்ஸில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

2 விதமான இருக்கை அமைப்புகளை பயன்படுத்தி இருக்காங்க

இதன் 7 சீட்டரில் பென்ச் டைப் இருக்கையும், 9 சீட்டரில் ஜம்ப் ரக இருக்கையும் வழங்கப்பட உள்ளது. இந்த இருக்கைகளை கடைசி ரோவில் பார்க்கலாம். இந்த கார் மாடலை வெறும் பயணிகள் வாகனமாக மட்டுமின்றி ஆம்புலன்ஸ் வெர்ஷனிலும் விற்பனைக்கு மஹிந்திரா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோட்டாரை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கூறப்படுகின்றது.

புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏத்தது

அதேவேளையில், புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ் 6 இரண்டாம் கட்டத்திற்கு இணங்க இது தயார் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஏப்ரல் முதல் புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மோட்டார் தேர்விலேயே பொலிரோ நியோ பிளஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இந்த மோட்டார் 94 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் எனும் இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர வேறு எந்த தகவலும் புதிய பொலிரோ நியோ பிளஸ் பற்றி வெளியாகவில்லை. விரைவில் அனைத்து முக்கிய விபரங்களும் அறிமுகத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 8:29 [IST]
English summary
Mahindra bolero neo plus spied
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+