7 பேர் ஒன்னா உக்காந்து போகலாம்! விலை இவ்ளோதானா! மஹிந்திராவின் இந்த காரை வாங்க எல்லாரும் முட்டி மோதறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இது இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாக கூடிய மஹிந்திரா கார்களில் ஒன்றாக திகழ்கிறது. விற்பனையில் மஹிந்திரா பொலிரோ காரின் சிறப்பான செயல்பாடு, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் தொடர்ந்துள்ளது.
நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மஹிந்திரா பொலிரோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் 9,519 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது பொலிரோ (Bolero) மற்றும் பொலிரோ நியோ (Bolero Neo) ஆகிய கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 8,108 ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 9,519 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 1,411 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 17.40 சதவீத வளர்ச்சி ஆகும். நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும்பாலான மஹிந்திரா கார்கள், விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இதில் பொலிரோ காரும் ஒன்றாக உள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் மஹிந்திரா பொலிரோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 75 பிஹெச்பி பவர் மற்றும் 210 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரில், அதிகபட்சமாக 100 பிஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ஆகிய 2 கார்களிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் கிடையாது. அதேபோல் இந்த 2 கார்களிலும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.
பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் இல்லாதபோதும் கூட, மஹிந்திரா பொலிரோ விற்பனையில் தூள் கிளப்பி கொண்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை (Price) 9.79 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.80 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆரம்ப விலை 9.64 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.15 லட்ச ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பொலிரோ கார் 7 சீட்டர் வெர்ஷனில் கிடைக்கிறது. அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆம்புலன்ஸ் வேரியண்ட் (5 சீட்டர்) தவிர, மற்ற அனைத்து வேரியண்ட்களும் 7 சீட்டர் வெர்ஷனில் கிடைக்கின்றன. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications








