மஹிந்திரா ஷோரூம்களில் கூட்டம் குவிய போகுது!! பின்ன... ரூ.73,000 வரையில் சலுகைகளை அறிவிச்சு இருக்காங்களே!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அதன் குறிப்பிட்ட கார்களுக்கு ரூ.73,000 வரையிலான சலுகைகளை இந்த ஜூலை மாதத்திற்காக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், சலுகைகளுடன் இந்த ஜூலை மாதத்தில் கிடைக்கக்கூடிய மஹிந்திரா கார்கள் குறித்தும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் முயற்சியாகவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கமான ஒன்றே. சமீபத்தில் கூட, மாருதி சுஸுகி, ரெனால்ட் நிறுவனங்கள் அவற்றின் சில கார்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்ததை பார்த்திருந்தோம்.

அந்த வரிசையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு ஜூலை மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, மஹிந்திரா தார் 4x4, எக்ஸ்யூவி300, பொலேரோ, பொலேரோ நியோ மற்றும் மராஸ்ஸோ கார்களை இந்த ஜூலை மாதத்தில் மஹிந்திரா டீலர்ஷிப் மையங்களில் வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.73,000 வரையிலான சலுகைகளை பெற முடியும்.
ரூ.73,000 வரையிலான அதிகப்பட்ச சலுகைகளை மஹிந்திரா மராஸ்ஸோ காரின் உயர்நிலை வேரியண்ட்டான எம்6+ -க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே மத்திய நிலை எம்4+ வேரியண்ட்டை ரூ.36,000 வரையிலான சலுகைகள் உடனும், எண்ட்ரீ-லெவல் எம்2 வேரியண்ட்டை ரூ.58,000 வரையிலான சலுகைகளுடன் இந்த ஜூலை மாதத்தில் பெறலாம். மஹிந்திராவின் எம்பிவி காரான மராஸ்ஸோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.10 லட்சத்தில் இருந்து ரூ.16.46 லட்சம் வரையில் உள்ளன.

மஹிந்திராவின் சிறந்த விற்பனை காரான பொலேரோவிற்கு ரூ.60,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ரூ.60,000 வரையிலான சலுகைகளை பெற நீங்கள் பொலேரோவின் டாப் பி6 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை பெற வேண்டும். அதுவே, எண்ட்ரீ-லெவல் பி4 வேரியண்ட்டிற்கு ரூ.37,000 மதிப்பிலான சலுகைகளும், பி6 வேரியண்ட்டிற்கு ரூ.25,000 வரையிலான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றான எக்ஸ்யூவி300-க்கு அதிகப்பட்சமாக ரூ.55,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெட்ரோல் வேரியண்ட்களை வாங்குவோர் ரூ.20,000 மதிப்பிலான சலுகைகளை மட்டுமே பெற முடியும். டீசல் வேரியண்ட்களை வாங்குவோர்க்கு ரூ.20,000இல் இருந்து ரூ.55,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 காரின் புதிய தலைமுறை காராக, பிரபலமான பொலேரோவின் பெயரில் கொண்டுவரப்பட்ட பொலேரோ நியோவிற்கு ரூ.50,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற மஹிந்திரா கார்களை போன்று பொலேரோ நியோவிலும் ரூ.50,000 வரையிலான சலுகைகளை பெற உயர் நிலை வேரியண்ட்களான என்10 ஆர் மற்றும் என்10 (ஆப்ஷ்னல்)-ஐ வாங்க வேண்டும். விலை குறைவான என்4 வேரியண்ட்டிற்கு ரூ.22,000 வரையிலான சலுகைகளும், மத்திய-நிலை என்8 வேரியண்ட்டிற்கு ரூ.31,000 வரையிலான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தாரை இந்த ஜூலை மாதத்தில் ரூ.30,000 பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம். இந்த பணம் தள்ளுபடி ஆனது தார் 4x4 வாகனத்தின் ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எல்.எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களிலும் கிடைக்கும். மற்றப்படி, தாரின் 4x2 வெர்சனுக்கு எந்த சலுகைகளும் இந்த ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எப்போதும் நாங்கள் கூறுவதுதான், இந்த சலுகைகள் மாநிலத்திற்கு, மாநிலம் மற்றும் நகரத்திற்கு, நகரம் சற்று வேறுப்படக் கூடும். ஸ்டாக்கில் கார்கள் குறைவாக இருந்தால், அவற்றை விரைவாக விற்று தீர்க்க அறிவிக்கப்பட்ட சலுகைகளை காட்டிலும் அதிக தொகையில் சலுகைகள் வழங்கப்படலாம். ஆதலால், இந்த ஜூலை மாத சலுகைகள் குறித்து விரிவான விபரங்களை அறிய அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப் மையத்தை தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









