மாலை போட்டு விரதம் இருந்தா கூட இந்த காரெல்லாம் உடனே கிடைக்காது! மஹிந்திரா காரோட காத்திருப்பு காலம் எவ்வளவு?
இந்தியாவில் பல ஹிட்டான கார்களை தன் லைன் அப்பில் வைத்து சமீப ஆண்டுகளாக மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வரும் நிறுவனம் மஹிந்திரா தான்.கிட்டத்தட்ட இந்நிறுவன்தின் எல்லா தயாரிப்புகளும் ஹிட் தான். இந்திய மக்கள் பலர் இந்நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கார்களுக்கான காத்திருப்பு காலம் பற்றி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களை கொண்ட நிறுவனம் என்றால் மஹிந்திரா நிறுவனம் தான். இந்நிறுவனத்தின் கார்களுக்கு 2 ஆண்டுகள் வரை கூட காத்திருப்பு காலம் இருந்தது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல பெயர் இருந்தாலும் நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து மஹிந்திரா நிறுவனம் தனது ஆலையின் தயாரிப்பு திறனை அதிகரித்துள்ளது. இதனால் பல கார்களின் காத்திருப்பு காலம் குறைந்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ என் காருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் துவங்கிய 5 நாட்களிலேயே 10 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டனர்.
| Mahindra | Waiting Period In March-23 |
| Scorpio N | Up To 65 Weeks |
| Scorpio Classic | Up To 26 Weeks |
| XUV700 | Up To 48 Weeks |
| Thar 4WD | Up To 3-4 Weeks |
| Thar RWD | Up To 74 Weeks |
| Bolero | Up To 8 Weeks |
| XUV300 | Up To 19 Weeks |
மஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கான காத்திருப்பு காலம் என்பது கணிசமான அளவில் குறைந்துவிட்டது. தற்போது தார் காருக்கு காத்திருப்பு காலம் 4 வாரங்கள் தான். இந்த தார் காரில் ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் ஜனவரி மாதம் அறிமுகமானது. இந்த கார் ரூ9.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த தார் ரியல் வீல் டிரைவ் காருக்கு தான் மஹிந்திர நிறுவனத்திலேயே அதிகமான காத்திருப்பு காலம் இருக்கிறது. 74 வாரங்கள் வரை இந்த காருக்கான காத்திருப்பு காலம் இருக்கிறது. 74 வாரங்கள் என்பது சுமார் 1.5 ஆண்டுகளாகும். அடுத்தாக மஹிந்திரா ஸ்கார் என் காரை பொருத்தவரை 65 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

இந்த 65 வாரக் காத்திருப்பு மிட்- வேரியன்டிற்கு தான், டாப் வேரியன்டான இசட்8 எல் காரை பொருத்தவரை ஆட்டோ கியர் வெர்ஷனிற்கு 24-26 வாரங்கள் தான் காத்திருப்பு காலம் .இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஆப்ஷன் கொண்ட கார் அதிகம் இருக்கிறது. மேனுவல் கியர் கார்களுக்கு 56 முதல் 58 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் காரை பொருத்தவரை இரண்டு வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இரண்டு வேரியன்டிற்கும் 24-26 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை இந்தியாவின் அதிக விலை கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த காரில் எம்எக்ஸ், ஏஎக்ஸ்3 மற்றும் ஏஎக்ஸ்5 ஆகிய வேரியன்ட்களுக்கு 24-26 வாரங்கள் வரையிலும், மற்ற வேரியன்ட்களுக்கு 48 வாரங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் இருக்கிறது. பொலிரோ காருக்கு 8 வாரங்களும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு 19 வாரமும் காத்திருப்பு காலம் இருக்கிறது. ஒருவழியாக மஹிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பை அதிகரித்துக் காத்திருப்பு காலத்தைக் குறைத்துவிட்டது.
மஹிந்திரா நிறுவனம் அடுத்த அறிமுகமாகச் சர்வதேச மார்கெட்டிற்கு தனது தார் 5 டோர் வெர்ஷன் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் மாருதி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஜிம்னி காருக்கு போட்டியாகக் களம் இறங்கவுள்ளது. மாருதி நிறுவனத்தின் 5 டோர் தார் கார் இந்தியாவில் ஆங்காங்கே பொது சாலைகளில் டெஸ்டிங்கில் இருப்பதைக் காண முடிகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








