ஏப்ரல் மாசம் முழுசா சைலென்டா சம்பவம் பண்ணிய மஹிந்திரா! இதை யாருமே எதிர்பார்க்கல!

மஹிந்திரா நிறுவனம் தனது ஏப்ரல் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் தனதுபயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகன விற்பனை விபஙர்கைள வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

மே மாதம் துவங்கியுள்ள நிலையில் ஆட்டேமொபைல் நிறுவனங்கள் வரிசையாக தங்கள் ஏப்ரல் மாத விற்பனை அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.

Mahindra Sales Report April 2023

இதன் படி இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 34,698 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 22,526 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிட்டால் 54.04 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மார்ச் மாதம் 35,997 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிட்டால் 3.61 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில் பயணிகள் வாகன செக்மெண்டில் கடந்த ஏப்ரல் மாதம் யூட்டிலிட்டி வாகனத்தைப் பொருத்தவரை மொத்தம் 34,694 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 22,168 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கார் மற்றும் வேனை பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 4 கார்களும், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 358 கார்களம் விற்பனையாகியிருந்தது.

Mahindra Sales Report April 2023

கமர்ஷியல் வாகன பிரிவில் 2 டன்னுக்கும் குறைவான இலகு ரக வாகனங்களைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 3416 வானகங்களும், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2929 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. 2 டன் முதல் 3.5 டன் வரை எடை கொண்ட வாகனங்களைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 15,665 வாகனங்களும், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13,768 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

3.5 டன் எடைக்கு அதிகமான வாகனங்களைப் பொருத்தவரை 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1150 வாகனங்களும், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 705 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. 3 வீலரை பொருத்தவரை 5552 வாகனங்கள் கடந்த ஏப்ரல் மாதமும், 3009 வாகனங்கள் கடந்தாண்டு ஏப்ரல் மாதமும் விற்பனையாகியுள்ளது.

Mahindra Sales Report April 2023

ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 1813 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2703 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஏற்றுமதியில் 33 சதவீத சரிவை மஹிந்திரா நிறுவனம் சந்தித்துள்ளது.

மஹிந்திராவின் விவசாயத்திற்கான டிராக்கர் விற்பனை பிரிவைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 36,405 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 35,398 மற்றும் வெளிநாட்டு விற்பனையில் 1,007 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த செக்மெண்டில் 11 சதவீத வீழ்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

Mahindra Cars Sales Apr 2023 Sales Vs Diff Growth (%)
Apr-23 34,698 Apr 2022 (YoY) 12,172 54.04
Apr-22 22,526 Mar 2023 (MoM) -1,299 -3.61
Mar-23 35,997 - - -

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் தன் காலடித் தடத்தை எடுத்து வைக்க முயன்று வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்நிறுவனம் டாடா விற்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 21:00 [IST]
English summary
Mahindra detailed sales report april 2023
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X