குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த கார்.. இவங்க இந்த கோவிலோட தீவிர பக்தர்களா?..

இந்தியாவில் தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மாடலும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு மிக சூப்பரான வரவேற்பு நாட்டு கார் காதலர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும் எனும் அளவிற்கே இந்திய எஸ்யூவி கார் சந்தையில் இந்த காருக்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இப்போது காரை புக் செய்தால் குறைந்தது 13 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்கிற மாதிரியான சூழலே எக்ஸ்யூவி700-க்கு நிலவுகின்றது.

Mahindra donates xuv700 suv

இந்த மாதிரியான ஓர் சூப்பரான கார் மாடலையே மஹிந்திரா நிறுவனம் பிரபல கோவில் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கின்றது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அமைந்திருக்கும் குருவாயூர் கோவிலுக்கே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இதுபோன்று இந்த கோவிலுக்கு காரை பரிசளிப்பு முதல் முறை அல்ல.

நிறுவனம், இதற்கு முன்னதாகவும் தன்னுடைய பிரபல கார் மாடலை இதேபோல் இந்த கோவிலுக்கு அன்பளிப்பு செய்து இருக்கின்றது. தார் காரையே அது வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது எக்ஸ்யூவி700 கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

Mahindra xuv700 suv

உயர்நிலை வேரியண்டான ஏஎக்ஸ்7 ஆட்டோமேட்டிக்கே கோவிலுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏஎக்ஸ் 7 ஆட்டோமேட்டிக் தேர்வு பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் தேர்வு ரூ. 22.37 லட்சமும், ரூ. 22.96 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்து. இத்தகைய மிக அதிக விலைக் கொண்ட கார் மாடலின் சாவியையே குருவாயூர் கோவில் நிர்வாகத்திடம் மஹிந்திரா நிறுவனம் கொடுத்திருக்கின்றது. குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் விகே விஜயனிடமே சாவி ஒப்படைக்கப்பட்டது.

Mahindra donates xuv700 to guruvayur temple

இதனை மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் தலைவர் வேலுசாமி அவரிடம் வழங்கினார். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 முதல் முறை 2021 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்ததில் இருந்து இப்போது வரை இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ரூ. 14.01 லட்சம் தொடங்கி ரூ. 26.18 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த காரில் பிரீமியம் தர அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், 10.25 திரை இரண்டு வழங்கப்பட இருக்கின்றன.

அதில் ஒன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், இரண்டாவது திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக செயல்படும். இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அடாஸ் அம்சம் போன்ற உயர் வகை தொழில்நுட்ப அம்சங்களும் எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது ஓர் லெவல் 2 செமி அட்டானமஸ் டிரைவிங் வசதிக் கொண்ட அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகும். இந்த அம்சத்தின் வாயிலாக, ஆட்டோமேட்டிக் அவசர கால பிரேக்கிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பைலட் அசிஸ்ட், டிரவுசினஸ் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்டன்ஸ் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலும் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் பலர் வரை திருப்பதி கோவிலையே தேடி சென்று பெரும் தொகை மதிப்பிலான பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். ஆனால், மஹிந்திரா நிறுவனம் சற்று மாறுதலாக குருவாயூர் கோவிலுக்கு பெரும் தொகைகளை நன்கொடை செய்து வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 10:13 [IST]
English summary
Mahindra gifted xuv700 suv to guruvayur temple in kerala
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X