2020, 21ல் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கல.. மஹிந்திராக்கு 2022ல் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டிருக்கு!
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு அதன் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகளவில் புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்ற ஆண்டிலேயே இந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மஹிந்திரா நிறுவனத்திற்கு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பானது கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக அதிக லாபத்தைப் பெறும் இந்திய நிறுவனமாக மஹிந்திரா மாறி உள்ளது. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு அதிகளவில் புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக இந்தியாவில் மிக அதிக புக்கிங்குகளை வாரி குவித்த நிறுவனங்களில் ஒன்றாக அது மாறி இருக்கின்றது.

குறிப்பாக, எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக புக்கிங்குகளை பெற்ற நிறுவனமாக அது உருவெடுத்து இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் தனது ஒட்டுமொத்த தயாரிப்பையும் எஸ்யூவி பிரிவிற்கு மாற்றியிருக்கின்றது. அதாவது நிறுவனம் எஸ்யூவி ரக கார் உற்பத்தியை மட்டுமே தற்போது மேற்கொண்டு வருகின்றது. ஆமாங்க, ஹேட்ச்பேக், செடான் மற்றும் எம்பிவி என எந்த ரக கார் மாடல்களின் உற்பத்தியையும் மேற்கொள்ளாமல் வெறும் எஸ்யூவி ரக காரை மட்டுமே அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த யுக்திக்கு மஹிந்திரா நிறுவனத்திற்கு மிக சிறப்பாக கை கொடுத்திருக்கின்றது என கூறலாம்.
எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனம் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் அமைந்துள்ளன. அதீத வரவேற்பின் காரணமாக நிறுவனத்தின் சில கார் மாடல்களுக்கு காத்திருப்பு காலம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் புதிய வருகையாக இருக்கும் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய மாடல்களுக்கே காத்திருப்பு காலம் மிக அதிகளவில் உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார் மாடல்களுடன் சேர்த்து ஸ்கார்பியோ கிளாசிக், எக்ஸ்யூவி 300, தார், பொலிரோ நியோ, பொலிரோ, மராஸ்ஸோ மற்றும் கேயூவி 100 என்எக்ஸ்டி உள்ளிட்ட கார் மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இவை அனைத்தும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றில் குறிப்பிட்ட சில மாடல்களுக்கே இந்தியர்கள் அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். செமி கன்டக்டர் பற்றாக் குறை பிரச்னை தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்ற சூழலிலும் உடனடியாக டெலிவரிக் கொடுக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது மஹிந்திரா நிறுவனம். இதற்காக மாற்று சிப் விநியோக வலை அமைப்பை உருவாக்கும் பணியில் அது ஈடுபட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க உற்பத்தி திறனையும் நிறுவனம் அதிகரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
ஆகையால், முன்பைக் காட்டிலும் இப்போது பல மடங்கு காத்திருப்பு காலம் குறைந்துக் காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 29 ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. 2023 ஆம் ஆண்டில் இருந்து தனை 39 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டில் இதனை 49 ஆயிரத்திற்கும் அதிகமாக யூனிட்டுகளாக உயர்த்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மஹிந்திரா நிறுவனம் தற்போது தனது அதிக கவனத்தை ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களில் மட்டுமே செலுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை மாற்றி மின்சார வாகன உற்பத்திலும் அதன் கவனத்தைச் செலுத்த இருக்கின்றது. இதற்கான பணியில் நிறுவனம் ஏற்கனவே களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் சமீபத்தில் தனது எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்தாக இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
ஆனால், முதல் வாகனமாக எக்ஸ்யூவி 400 மாடலே விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் 39.4 kWh பேட்டரி பேக்கையே மஹிந்திரா பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








