எல்லாருக்கும் பிடித்த கார்களின் விலைகளை உயர்த்திய மஹிந்திரா!! அப்போவே வாங்கி போட்டிருக்கலாம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் ஸ்கார்பியோ-என் மற்றும் தார் வாகனங்களின் விலைகளை அதிரடியாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, இந்த மஹிந்திரா வாகனங்களை இனி எந்த விலைகளில் வாங்கலாம் என்பதையும், இந்த வாகனங்களை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, தார், ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் மஹிந்திராவில் இருந்து கடந்த சில வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடர்ன் கார்களாகும். இவை மூன்றில், ஸ்கார்பியோ-என் காரை கடந்த 2022இல் ரூ.11.99 லட்சம் என்கிற அறிமுக விலையில் மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஆனால் அதன்பின் இந்த காரின் விலைகள் சில முறை அதிகரிக்கப்பட்டன. இந்த வகையில் தற்போதும் ஸ்கார்பியோ-என் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிரடியாக சுமார் ரூ.81,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஸ்கார்பியோ-என் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.13.76 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த காரின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.53 லட்சம் ஆகும்.
ரூ.81,000 என்ற அதிகப்படியான விலை உயர்வை ஸ்கார்பியோ-என் காரின் மிட் வேரியண்ட்டான இசட்4 4-வீல்-டிரைவ் வேரியண்ட் பெற்றுள்ளது. இந்த காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான இசட்2-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.52,199 அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டாப் இசட்8எல் வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.1,995 மட்டுமே அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மறுப்பக்கம், தார் எஸ்யூவி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.44,000 வரையில் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், தாரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.98 லட்சமாக அதிகரித்துள்ளது. தாரின் அதிகப்பட்ச விலை ரூ.16.93 லட்சம் ஆகும். ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) 2-வீல்-டிரைவ் மேனுவல் வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.44,000 விலை உயர்வை பெற்றுள்ளது.
எல்.எக்ஸ் 2-வீல்-டிரைவ் ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, தாரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் அனைத்தும் ரூ.16,000 உயர்த்தப்பட்டு உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை ரூ.26,000 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஸ்கார்பியோ கிளாசிக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.25 லட்சம் ஆகும்.

அதேநேரம், ஸ்கார்பியோ கிளாசிக்கின் எஸ்11 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24,000 மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.05 லட்சமாக உயர்ந்துள்ளது. ஸ்கார்பியோ-என் மற்றும் தார் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ஸ்கார்பியோ கிளாசிக் கார் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து அதிகரித்துவரும் கார் பாகங்களின் விலைகளினாலும், தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போக்குவரத்து செலவீனங்களினாலும் வாகனங்களின் விலைகளை அவ்வப்போது அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இந்த புதிய விலை உயர்வினால், மேற்கூறப்பட்ட மஹிந்திரா கார்களின் விற்பனை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









