கார்களுக்கான மெகா சர்வீஸ் கேம்பிற்கு ஏற்பாடு செய்திருக்கும் மஹிந்திரா.. இங்கேயும் ஆஃபரை வாரி இறைச்சிருக்காங்க!
நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, நாடு தழுவிய 'மெகா சர்வீஸ் கேம்ப்-ஐ' தொடங்கி இருக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சர்வீஸை தனது அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் வாயிலாக தரும் விதமாக இதனை மஹிந்திரா ஆரம்பித்து உள்ளது.
குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே நடைபெற இருக்கும் இந்த சர்வீஸ் கேம்பில் சில சேவைகள் இலவசமாகவும், சில சேவைகள் குறைந்த கட்டணத்திலும் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க, பாகங்கள் மற்றும் ஆயில் மாற்றங்களுக்கு 5 சதவீதம் வரையிலும், மெக்கானிக் சர்வீஸ் சார்ஜிற்கு 10 சதவீதம் வரை சலுகை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேக்ஸிகேர் சேவைக்குகூட ஆஃபர் இருக்கு
இதுதவிர, பிரத்யேக ஆஃப்ராக 'மேக்ஸி கேர்' எனும் வெளிப்புற பாடியில் செய்யப்படும் அழகு வேலையையும் கூட 25 சதவீதம் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன், இந்த கால கட்டத்தில் 24X7 ரோடு சைடு அசிஸ்டன்ஸை பெறுவோருக்கு 15 சதவீதம் சலுகை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் கூறி இருக்கின்றது. இந்த சிறப்பு சர்வீஸ் கேம்ப் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள மஹிந்திரா சர்வீஸ் மையங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
90 நிமிஷத்துலையே வேலை முடிஞ்சிடும்
அதி வேகமாக, 90 நிமிடங்களிலேயே வழக்கமான மெயின்டெனன்ஸை செய்து கொடுக்கும் அளவிற்கு பிரத்யேக கருவிகள் இந்த சேவைக்காக சர்வீஸ் மையங்களில் களமிறக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின்கீழ் உங்களது கார்களை சர்வீஸ் செய்ய விரும்பினால் உடனடியாக இதற்கான அப்பாயின்மென்டை இப்போதே பெறுவதே நல்லது. நிறுவனம் முன்கூட்டியே நியமனம் பெறும் வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை வழங்க இருக்கின்றது.
கொஞ்சம் நாளைக்குதான் இந்த சேவை
மஹிந்திராவின் இந்த மெகா சர்வீஸ் கேம்ப் இன்று (16 பிப்ரவரி) தொடங்கி பத்து நாட்கள் வரை நடைபெற இருக்கின்றது. அதாவது, இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சர்வீஸில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃப்ரீ சர்வீஸ்கள், 75 பாயிண்டுகள் இலவச செக்-அப், பெரும் தொகை டிஸ்கவுண்ட் மற்றும் சிறப்பு பரிசுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் 500 வாடிக்கையாளர்களால் இந்த கேம்பின் வாயிலாக பலன் பெற முடியும்.
மஹிந்திரா ஷீல்டு எக்ஸ்டெண்ட் வாரண்டியை பெற்ற வாடிக்கையாளர்களுக்கே கூடுதல் சிறப்பு கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட இருக்கின்றது. மஹிந்திரா கார்களுக்கு நாட்டில் டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த திடீர் மெகா சர்வீஸ் கேம்பை நிறுவனம் தொடங்கி வைத்திருக்கின்றது. மஹிந்திராவின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700 மற்றும் தார் ஆகிய கார் மாடல்களுக்கு வரவேற்பு மிக அமோகமாக உள்ளது.
எப்பா.. இவ்ளோ பேரு புக் பண்ணியிருக்காங்களா!
2.33 லட்சம் பேர் வரை மஹிந்திரா கார்களுக்காக புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமில்லைங்க நிறுவனத்தின் பிற முக்கிய தயாரிப்புகளான பொலிரோ நியோவிற்காக 9 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், எக்ஸ்யூவி 300 காருக்கு 23 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் தற்போது முழுவதுமாக எஸ்யூவி கார் உற்பத்தி பிரிவிற்கு மாறி இருக்கின்றது.
அதாவது, ஹேட்ச்பேக், எம்பிவி மற்றும் செடான் போன்ற கார்களின் உற்பத்தியில் இருந்து விலகி நிற்கின்றது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கே தற்போது டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே நிறுவனம் முழுமையாக எஸ்யூவி ரக கார் உற்பத்திக்கு மாறி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த யுக்திக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதையே தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு சலுகைதான் காரணம்
நிறுவனம் அறிமுக சலுகை யுக்தியைப் பயன்படுத்தி தனது புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த யுக்தியும் அதன் அதிகளவு புக்கிங்கிற்கு மற்றுமொரு காரணமாக அமைந்து உள்ளது. அதேவேளையில், மஹிந்திராவின் அனைத்து கார் மாடல்களும் மிகவும் தரம்மிக்கதாக தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் அமோகமான வரவேற்பிற்கான ஓர் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களை சர்வீஸ் விஷயத்திலும் கவரும் விதமாக சிறப்பு மெகா சர்வீஸ் கேம்பை நாடு முழுவதும் மஹிந்திரா தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








