இவ்வளவு கம்மி பட்ஜெட்ல டிராக்டரா? ஒவ்வொரு விவசாயியும் இதை ஈஸியா வாங்கிடலாமே!

மஹிந்திரா நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் பியூச்சர்ஸ்கேப் நிகழ்வில் தனது ஓஜா டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓஜா என்ற டிராக்டர்கள் பிரத்தியேகமாக ஓஜா பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் குறைந்த எடை கொண்ட டிராக்டர்களை தயாரிக்கும் பிளாட்ஃபார்ம் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாது விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது தென்னாப்பிரிக்காவில் பியூச்சர்ஸ்கேப் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அங்கு தனது பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வரிசையாக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

mahindra oja launch

இந்த நிகழ்ச்சியில் மஹிந்திராவின் புதிய பிளாட்பார்மான ஓஜா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஓஜா டிராக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஓஜா பிளாட்பார்ம் என்பது குறைந்த எடை கொண்ட டிராக்டர்களை தயாரிக்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் ஆகும். இதில் தான் இனி ஓஜா டிராக்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் குறைந்த எடை கொண்ட ஓஜா 2127 மற்றும் ஓஜா 3140 ஆகிய இரண்டு குறைந்த எடை கொண்ட டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஓஜா 2127 என்ற டிராக்டர் ரூபாய் 5.64 லட்சம் என்ற விலையிலும் ஓஜா 3140 என்ற டிராக்டர் ரூபாய் 7.35 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்த டிராக்டர்கள் அதன் போட்டி தயாரிப்புகளுடன் பார்க்கும்போது குறைவான விலையிலும் அதிக அம்சங்களுடன் கொண்ட டிராக்டராக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் இந்த ஓஜா என்ற வார்த்தையை சமஸ்கிருதத்தில் உள்ள ஓஜாஸ் என்ற சொல்லிலிருந்து எடுத்துள்ளது. ஓஜாஸ் என்றால் ஆற்றல்களின் இருப்பிடம் என்று அர்த்தம்.

மஹிந்திரா நிறுவனம் இந்த ஓஜா ரக டிராக்டர்களை அதிக தொழில்நுட்பம் மற்றும் புதிய டிசைனை கொண்டு வடிவமைத்துள்ளது. இந்த டிராக்டர்கள் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முழுவதும் விற்பனையாக உள்ளது. இந்த டிராக்டரை இந்தியாவில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலி, ஜப்பானில் உள்ள மஹிந்திரா அக்ரிகல்ச்சர் மிஷினரி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளது.

இந்த ஓஜா டிராக்டர்களை தயாரிக்க மஹிந்திரா நிறுவனம் ரூபாய் 1200 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஓஜா போர்ட்ஃபோலியோவில் மொத்தம் ஏழு டிராக்டர்கள் வெளியாக உள்ளன. சப்-காம்பேக்ட், காம்பேக்ட், சுமால் யூட்டிலிட்டி என்ற அனைத்து விதமான டிராக்டர் செக்மெண்டிலும் இதன் டிராக்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஓஜா பிளாட்பார்மல் தயாரிக்கும் அனைத்து டிராக்டர்களும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இதன் இன்ஜின் திறன் 20 எச்பி முதல் 40 எச்பி வரை இருக்கும் படி டிசைன் செய்துள்ளது. இதில் ஒவ்வொரு டிராக்டர்களும் ஒவ்வொரு விதமான விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் படி வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த 7 டிராக்டர்களும் மூன்று விதமான தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. MYOJA,PROJA, ROBOJA ஆகிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்த உள்ள பட உள்ளன. முதல் MYOJA என்பது அதிக நுட்பங்கள் கொண்ட தொழில்நுட்பமாகவும், இரண்டாவது PROJA அதிக திறன் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் மூன்றாவது ROBOJA தானியங்கியாக செயல்படும் தொழில்நுட்பமாக உருவாக்கப்பட உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஜா 2127 மற்றும் ரோஜா 3140 ஆகிய டிராக்டர்கள் புரொஜெக்டர் ஹெட்லைட்டை கொண்டுள்ளது. இந்த டிராக்டர்களின் அம்சங்கள் அது பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பொருத்து மாறுபடும். உதாரணமாக PROJA தொழில்நுட்பம் முன்பக்கம் 12 பின்பக்கம் 12 என கியர்களையும் முன்பக்கமும் பின்பக்கமும் சட்டிலையும் 0.3 கிலோ மீட்டர் கிரிப்பர் வேகமும் பிடிஓ பட்டன் அம்சங்களும் கொண்டதாக இருக்கும்

ROBOJA தொழில் நுட்பத்தை பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் ஒன்சைடு பிரேக்கிங், ஆட்டோ இம்ப்ளிமென்ட் லிஃப்ட், ஆட்டோ பிடிஓ ஆன்/ஆஃப் ஆகிய தொழில்நுட்பங்கள் இடம் பெற்று இருக்கும். MYOJA தொழிற்நுட்பத்தில் சர்வீஸ் அலர்ட் மற்றும் டெலிமேடிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த 3 தொழிற்நுட்பங்கள் டிராக்டரில் பயன்படுத்தப்படும்.

மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் டிராக்டர் அணிவரிசையில் இந்த ஓஜா டிராக்டர்கள் சுமார் 25 சதவீத மார்க்கெட் பங்கை வகித்திருக்கும். இந்த டிராக்டர்களை மஹிந்திரா நிறுவனத்தின் சர்வதேச அளவிலான 1100 பார்ட்னர்கள் வழியாக விற்பனை செய்கிறது. இந்த மஹிந்திரா ஓஜா மாடல் டிராக்டர்கள் வடக்கு அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து விவசாயத்திற்கு தேவையான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்வது முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஓஜா ரக டிராக்டர்கள் சிறு குறு விவசாயிகளுக்கு நிச்சயம் உகந்த வகையில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இது இந்தியாவிற்கு வருமா என்பதை பொருத்திருந்து பார்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 16, 2023, 10:50 [IST]
English summary
Mahindra oja tractor lineup explore prices model options and additional information here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+