மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்த 1 லட்சம் கார்களில் பிரச்னை... நடந்த தப்ப அவங்களே சரி செய்ய போறாங்களாம்...

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700 (XUV 700) -ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரிலேயே குறிப்பிட்ட ஓர் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தயாரிப்பின்போதே ஏற்பட்ட இந்த கோளாறை சரி செய்வதற்காக அந்நிறுவனம் பாதிப்பு இருப்பதாக கருதப்படும் கார்களை திரும்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. என்ன மாதிரியான பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது?, எந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 700 கார் மாடலில் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றன? இந்த அழைப்பின்கீழ் என்னவெல்லாம் செய்யப்பட இருக்கின்றன?, இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம் வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Mahindra xuv700 recall

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி 700 இருக்கின்றது. இந்த எஸ்யூவி ரக காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 700 காரில் தயாரிப்பு பிரச்னை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அதனை சரி செய்யும் பொருட்டு மஹிந்திரா நிறுவனம் அந்த கார்கள் அனைத்தையும் திரும்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாகும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி சுமார் 1,08,306 யூனிட்டுகள் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Mahindra xuv700 front

இந்த காரின் எஞ்ஜின் பாதையில் உள்ள ஒயரிங்கில் பிரச்னை இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கண்டுபிடித்திருக்கின்றது. இதனை சரி செய்யவே நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கின்றது. 2021 ஜூன் 8 தொடங்கி 2023 ஜூன் 28 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார்களிலேயே பிரச்னை இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஆகையால், இந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே தற்போது அழைப்பும் விடுக்கப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 கார் மாடலுக்கு மட்டுமின்றி எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றது. சுமார் 3,560 யூனிட்டுகள் எக்ஸ்யூவி 400 காருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

2023 பிப்ரவரி 16 தொடங்கி 2023 ஜூன் 5 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட எக்ஸ்யூவி 400 கார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் உள்ள பிரேக் ஸ்பிரிங்கில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு முறை அழுத்திய பின்னர் அது மீண்டும் மேலே எழும்புவதில் லேசாக சிக்கலைச் சந்தித்து இருக்கின்றது.

இந்த பிரச்னையையும் சரி செய்யப்பட இருக்கின்றது. இதற்காகவே எக்ஸ்யூவி 700 மற்றும் எக்ஸ்யூவி 400 கார் மாடல்களுக்கு மஹிந்திரா அழைப்பு விடுத்திருக்கின்றது. அனைத்து கோளாறுகளும் இந்த அழைப்பின்பேரில் சரி செய்யப்பட இருக்கின்றன. உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு என்பதால் இதனை கட்டணமில்லாமலேயே மஹிந்திரா சரி செய்துக் கொடுக்க இருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கும் இந்த இரு கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, எக்ஸ்யூவி 700 காரை கையில் பெற ஒரு சிலர் புக்கிங் செய்துவிட்டு பல மாதங்களாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கே எக்ஸ்யூவி 700 எஸ்யூவிக்கு டிமாண்ட் மிக சிறப்பாக நிலவிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தயாரிப்பின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் விதமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் அழைப்பு விடுப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. கியா, எம்ஜி, ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி என பல நிறுவனங்கள் இத்தகைய சிக்கலில் சிக்கி இருக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்யும் பொருட்டு அவை ரீ-கால் அழைப்பையும் விடுத்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2023, 19:43 [IST]
English summary
Mahindra recalls more than 1 lakh units of xuv700 and 3 thousand units of xuv400
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+