இப்ப புக் பண்ணா 76 வருசம் கழித்துத் தான் டெலிவரி! வாடிக்கையாளரைத் தெறிக்க விட்ட மஹிந்திரா! நடந்தது என்ன?

இப்பொழுது புக் செய்தால் 76 ஆண்டுகளுக்குப் பிறகு தான் டெலிவரி என மஹிந்திரா வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ரசீதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர் செய்த சிறு தவறாமல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் பொதுவாக டீலர்களிடமிருந்து புக்கிங்கை பெறுகின்றன. அதன் அடிப்படையில் தான் அந்த டீலர்களுக்காக கார்களை தயாரித்து விநியோகம் செய்கின்றனர். டீலர்கள் நேரடியாக வாடிக்கையாளரிடம் புக்கிங்கை பெற்று கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . இப்படியாக புக்கிங் செய்யப்படும் கார்களுக்கு காத்திருப்பு காலம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது.

இப்ப புக் பண்ணா 76 வருசம் கழித்துத் தான் டெலிவரி! வாடிக்கையாளரைத் தெறிக்க விட்ட மஹிந்திரா! நடந்தது என்ன?

காத்திருப்பு காலம்!

அதாவது தற்போது புக்கிங் செய்தால் அந்த காரின் தயாரிப்பு மற்றும் டிமாண்டிற்கு தகுந்தார் போல காத்திருக்க வேண்டிய காலம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதன் சில கார்களுக்கு நாட்கள் கணக்கில் துவங்கி ஆண்டுக் கணக்கில் கூட காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்தியாவிலேயே நீண்ட காத்திருப்பு காலத்தை கொண்ட நிறுவனம் மஹிந்திரா தான். இந்நிறுவனத்தின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு நீண்ட கால காத்திருப்பு காலம் இருக்கிறது.

எக்ஸ்யூவி 700 கார் ஒன்றை புக்கிங் செய்தால் 2 ஆண்டுகள் வரை கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீங்கள் ஒரு காரை புக் செய்து விட்டு எவ்வளவு காலம் காத்திருக்கலாம் என நினைக்கிறீர்கள்? ஒரு ஆறு மாதம்? அதிகபட்சம் பிடித்த காரை வாங்க ஒரு வருஷம் காத்திருக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் புதிய கார் ஒன்றை புக் செய்தவருக்கு 76 ஆண்டுகள் காத்திருப்பு காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்ப புக் பண்ணா 76 வருசம் கழித்துத் தான் டெலிவரி! வாடிக்கையாளரைத் தெறிக்க விட்ட மஹிந்திரா! நடந்தது என்ன?

எக்ஸ்யூவி 700!

சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் மஹிந்திரா நிறுவனத்தில் எக்ஸ்யூவி 700 கார் ஒன்றை புக்கிங் செய்தார். அவர் புக்கிங்கை ஏற்றுக்கொண்ட டீலர் அதற்கான ரசீதை வழங்கினர். அந்த ரசீதில் இருந்த விஷயத்தைப் பார்த்து அவர் மிரண்டுபோய்விட்டார். பொதுவாக வாகனங்களை புக்கிங் செய்யும் போது அந்த வாகனம் எப்பொழுது டெலிவரி செய்யப்படும் என உத்தேச தேதி ஒன்று அதில் கொடுக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவோ அல்லது தேதிக்குப் பின்னரோ கூட அந்த வாகனம் டெலிவரி செய்யப்படும்.

இந்த சம்பவத்தில் டீலர் வழங்கிய ரசீதில் குறிப்பிட்ட கார் டெலிவரி செய்யும் தேதியில் 9-செப்-99 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2099ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி இந்த கார் டெலிவரி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 76 ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இது குறித்து டீலரிடம் கேட்டார்.

76 ஆண்டுகள்!

அதன் பின்னர் டீலர் இந்த ரசீதை செக் செய்து பார்த்த போது இந்த கார் டெலிவரி தேதியில் தட்டச்சு பிழை இருந்தது. தெரியவந்தது. அதன் காரணமாகவே தேதி மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் வாடிக்கையாளருக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.தற்போது அவருக்கு 2024 ஆண்டு டெலிவரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது சமூகவலைத்தளங்களில் தவறாக அச்சடிக்கப்பட்ட ரசீது வைரலாக பரவி வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த காரின் புதிய வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் இருக்கிறது. 5ஸ்டார் ரேட்டிங் பெற இந்த அம்சம் மிகவும் முக்கியமானது. இந்த அம்சம் இந்த காரின் ஏஎக்ஸ்3,எம்எக்ஸ், மற்றும் ஏஎக்ஸ்5 மாடல் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களில் மட்டுமே இருக்கிறது. இந்த வேரியன்ட் ரெகுலர் வேரியன்டை விட ரூ50 ஆயிரம் அதிகமாகும்.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் கிராஷ் டெஸ்டில் பெரியவர்களுக்கு 17க்கு 16.03 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49ல் 41.66 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் காரில் அதிகமான குழந்தைகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் இது தான்.இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2023, 13:58 [IST]
English summary
Mahindra said a customer had to wait for 76 years delivery is scheduled for 2099
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+