வருஷ கடைசிலகூட சம்பவம் செய்த மஹிந்திரா! டிசம்பரில் எகிறிய சேல்ஸ்.. மாருதிக்கு பொறாமை தலைக்கு ஏறியிருக்கும்!
மாருதி சுஸுகி சென்ற ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் கணிசமான அளவு விற்பனைச் சந்தித்திருக்கின்ற நிலையில், மஹிந்திரா நிறுவனம் பல மடங்கு அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம்குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அண்மையில், நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 2022 ஆம் ஆண்டில் அதிகளவில் புக்கிங்குகள் கிடைத்ததாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, தற்போது 2022 டிசம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்கள் எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2022 டிசம்பரில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் 28,333 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கன்றன. இது 2021 டிசம்பரைக் காட்டிலும் 62 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். 2021 டிசம்பரில் நிறுவனத்தின் கார்கள் ஒட்டுமொத்தமாகவே 17,469 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. மஹிந்திரா நிறுவனம் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கவில்லை. அது வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தக் கூடிய வாகனங்களையும் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.
இவற்றின் விற்பனையும் சற்றே அதிகமாகவே உள்ளது. நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 20,080 யூனிட்டுகள் வரை விற்பனையாகி உள்ளன. இதுதவிர 3,100 யூனிட்டுகள் வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கின்றது. ஆகையால், 2022 டிசம்பரில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 56 ஆயிரத்து 677 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது தெரிகின்றது. இந்த எண்ணிக்கையே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மவுசு அதிகரித்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர் விற்பனை உயர்வின் காரணமாக நிறுவனத்தின் ஆண்டு- டூ- ஆண்டு விற்பனை சதவீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் 65.09 சதவீதம் அதிக வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3,32,984 யூனிட்டுகள் மஹிந்திரா வாகங்கள் விற்பனையாகி உள்ளன. 2021 இல் 2,01,693 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதிலும், மஹிந்திராவின் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து உள்ளதுது. முதல் பாதியில் 1,50,268 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், இரண்டாம் பாதியில் அதைவிட சற்று அதிகமாக 1,82,716 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இத்தகைய தொடர் மாபெரும் விற்பனை வளர்ச்சியின் காரணமாகவே மஹிந்திராவால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறும் நிறுவனமாக மாற முடிந்திருக்கின்றது.
இந்த மாபெரும் வளர்ச்சிக்கு பின்னால் நிறுவனத்தின் புதுமுகங்களே காரணமாக உள்ளன. மஹிந்திரா அண்மையில் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கியது. இவற்றிற்கு வரவேற்பு மிக மிக அதிகம். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இவற்றில் ஏதேனும் ஓர் கார் மாடல்களைக் கையில் பெற வேண்டுமானால், அவற்றை புக் செய்துவிட்டு சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த அளவிற்கு அக்-கார் மாடல்களுக்கு வரவேற்பு நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் காத்திருப்பு காலத்தை அதிகம் கொண்டிருக்கும் கார் மாடல்களில் இவையும் ஒன்றாகும். மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களுடன் சேர்த்து தார், எக்ஸ்யூவி 300, பொலிரோ நியோ, பொலிரோ, மராஸ்ஸோ மற்றும் கேயூவி 100 என்எக்ஸ்டி உள்ளிட்ட கார் மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.
இவற்றில் தார் கார் மாடலுக்கும் மிக தரமான டிமாண்ட் இந்திய சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கும் காத்திருப்பு காலம் வாரங்கள் தொடங்கி மாதங்கள் வரை நிலவுகின்றது. மாநிலம் மற்றும் முக்கிய நகரங்களை பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டு உள்ளது. இந்த கார் மாடலுக்கு மட்டுமின்றி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கும் வரவேற்பு அதிகரித்தே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த மின் வாகன சந்தையிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக நிறுவனம் விரைவில் எக்ஸ்யூவி 400 இவி வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








