போட்டி நிறுவனங்களை எல்லாம் அண்ணாந்து பாக்க வைத்த மஹிந்திரா! இதற்கு முன் செய்யாத சாதனையை செஞ்சிருக்காங்க!
இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா (Mahindra). இந்த நிறுவனத்தின் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 43,708 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை (Highest Ever Monthly Sales) ஆகும். இதற்கு முன்பாக மஹிந்திரா நிறுவனம் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதன் மூலமாக விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 32,298 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 43,708 ஆக உயர்ந்துள்ளது. இது 35 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சி போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ள எண்கள், இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து 1,854 கார்களை மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதியும் (Export) செய்துள்ளது. இதுதவிர 25,715 வர்த்தக வாகனங்களையும் (Commercial Vehicles) மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஸ்கார்பியோ-என் (Scorpio-N), ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic), எக்ஸ்யூவி 700 (XUV 700), எக்ஸ்யூவி 300 (XUV300), தார் (Thar), பொலிரோ (Bolero), பொலிரோ நியோ (Bolero Neo) உள்பட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது.
அத்துடன் எக்ஸ்யூவி 400 (XUV 400) என்ற எலெக்ட்ரிக் காரையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுளளது. எனவே வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த ஒரு சில வருடங்களாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த அனைத்து கார்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய தார், ஸ்கார்பியோ-என், எக்ஸ்யூவி700 ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.
இதன் பலனைதான் மஹிந்திரா நிறுவனம் தற்போது அறுவடை செய்ய தொடங்கியுள்ளது. அத்துடன் டாடா நிறுவனத்தை போல், மஹிந்திரா நிறுவனத்தின் கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் ஜொலிக்க தொடங்கியிருக்கின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








