சின்ன வயசுல இருந்தே எல்லாருக்கும் பிடிச்ச கார்! சத்தமே இல்லாம தரமான சம்பவத்தை செய்த மஹிந்திரா ஸ்கார்பியோ!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). கடந்த 2002ம் ஆண்டுதான், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இடைப்பட்ட 21 ஆண்டுகளில், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பல்வேறு மாற்றங்களை சந்தித்து விட்டது.

தற்போதைய நிலையில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) என இந்த காரில் மொத்தம் 2 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை, மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்துள்ளது.

Mahindra Scorpio N

9 லட்சம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹான் பகுதியில் செயல்பட்டு வரும் மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில், 9 லட்சமாவது மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 9 லட்சமாவது காராக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது, மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடல் ஆகும்.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் மற்றொரு விஷயம் என்னவென்றால், மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலுக்கு தற்போது ஒரு வயது நிறைவடைந்து விட்டது என்பதுதான். ஆம், மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடல், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதிதான் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra Scorpio 9 Lakh Sales Milestone

தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலின் ஆரம்ப விலை 13.05 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.52 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16.81 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் மஹிந்திரா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை ஸ்கார்பியோ தன்வசம் வைத்துள்ளது. மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரை விட, மஹிந்திரா ஸ்கார்பியோ பிரபலமாக திகழ்கிறது. கடந்த மே மாதம் மட்டும் மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 9,318 ஸ்கார்பியோ கார்களை (2 மாடல்களும் சேர்த்து) விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 9 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டுவதற்கான தகுதியுடைய காராகவே மஹிந்திரா ஸ்கார்பியோ இருக்கிறது. இதன் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் போன்றவை இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க கூடிய அம்சங்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 14:06 [IST]
English summary
Mahindra scorpio 9 lakh sales milestone all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+