கொரியன் ஹூண்டாய்க்கு தண்ணி காட்டிய நம்ம ஊர் மஹிந்திரா நிறுவனம்!! இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கல!

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார்களின் விற்பனை பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரை கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் கடந்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இந்த செய்தி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தை தாண்டி, மஹிந்திரா நிறுவனத்துக்கும் இன்ப அதிர்ச்சியான செய்தியாகி உள்ளது.

மஹிந்திராவில் எத்தனை கார்கள் புதியது, புதியதாக வெளிவந்தாலும், ஸ்கார்பியோ கார்களுக்கு உண்டான மவுசு எப்போதும் குறையாது என்றுதான் சொல்ல வேண்டும். மஹிந்திராவின் எஸ்யூவி காரான ஸ்கார்பியோ அதன் பெட்டகம் வடிவிலான தோற்றத்தினால் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. அத்துடன், இந்திய தயாரிப்பு என்பதும் ஸ்கார்பியோ கார்களின் வளர்ச்சிக்கு ஓர் முக்கிய காரணமாக விளங்குகிறது.

mahindra scorpio beat hyundai creta

அதேபோல், ஹூண்டாய் கிரெட்டா கார்களுக்கும் நம் நாட்டில் கணிசமான இரசிகர் பட்டாளம் உள்ளது. இருப்பினும், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் கிரெட்டாவை மஹிந்திராவின் ஸ்கார்பியோ தோற்கடித்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா காரை மட்டுமின்றி, கடந்த மாத விற்பனையில் கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்ற மற்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்களையும் மஹிந்திரா ஸ்கார்பியோ முந்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 13,578 ஆகும். ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 7,438 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த மாதத்தில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது 2022 அக்டோபரை விட 83% அதிகரித்து உள்ளது.

mahindra scorpio beat hyundai creta

மறுப்பக்கம், ஹூண்டாய் கிரெட்டா கார்கள் கடந்த மாதத்தில் 13,077 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனையும் அதன் 2022 அக்டோபர் மாத விற்பனையை விட 10% அதிகரித்துள்ளது என்றாலும், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை விட கடந்த மாதத்தில் சில நூறு கிரெட்டா கார்கள் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், கிரெட்டாவை காட்டிலும் 501 ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், கியா செல்டோஸை காட்டிலும் கடந்த மாதத்தில் ஏறக்குறைய 1,400 ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த மாதத்தில் 12,362 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

mahindra scorpio beat hyundai creta

இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் தற்சமயம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஸ்கார்பியோ கிளாசிக் ஆனது மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

அதுவே, ஸ்கார்பியோ-என் ஆனது ஓர் மாடர்ன் மஹிந்திரா கார் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு உண்டான பார்வையை ஸ்கார்பியோ-என் மாற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, தற்போதைய நிலையில் 1 இலட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் மஹிந்திரா ஸ்கார்பியோவுக்கு கிடைத்துள்ளன.

mahindra scorpio beat hyundai creta

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ, ஹூண்டாய் கிரெட்டா இரண்டும் எஸ்யூவி கார்கள் தான் என்றாலும், தோற்றத்தில் இரண்டும் வேறுப்பட்டவை. அதாவது, கிரெட்டாவை காட்டிலும் ஸ்கார்பியோ அளவில் பெரியது. ஸ்கார்பியோ கார்களின் உற்பத்தி மெதுவாக நடைபெறுவதற்கும் இதனை ஒரு காரணமாக சொல்லலாம். இருப்பினும், கடந்த மாதத்தில், கிரெட்டாவை காட்டிலும் ஸ்கார்பியோ கார்களை அதிக எண்ணிக்கையில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 13, 2023, 22:48 [IST]
English summary
Mahindra scorpio beat hyundai creta in october sales check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X