லேண்ட் ரோவர் கார் எல்லாம் எதுக்குங்க!! நமக்கு மஹிந்திரா ஸ்கார்பியோவே போதும்... போட்டி போட்டு வாங்கும் மக்கள்!

கடந்த 2023 செப்டம்பர் மாததத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் அசத்தி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரை விட இது எவ்வளவு அதிகம் என்பதையும், தற்சமயம் விற்பனையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை முன்னதாக இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் மஹிந்திரா வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது, தனது நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு காரின் எண்ணிக்கைகளையும் தனித்தனியாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

mahindra scorpio cars sales growth

மஹிந்திராவின் மாடர்ன் காரான எக்ஸ்யூவி700 கடந்த செப்டம்பரில் 8,555 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த வரிசையில் தற்போது, மஹிந்திராவின் அடையாளமான ஸ்கார்பியோ கார்களின் கடந்த மாத விற்பனை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி பார்க்கும்போது, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 11,846 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 9,536 மட்டுமே ஆகும். இந்த வகையில், ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது 2022 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் 24.22% அதிகரித்துள்ளது.

mahindra scorpio cars sales growth

இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் மஹிந்திரா ஸ்கார்பியோவும் ஒன்றாக இருக்கும். கடந்த 2022ஆம் ஆண்டு வரையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் ஒரேயொரு உடலமைப்பில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டில் ஸ்கார்பியோ-என் புதுமையான உடலமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு உண்டான பெட்டகம் வடிவிற்கு மாற்றாக செவ்வக வடிவில் ஸ்கார்பியோ-என் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், ஸ்கார்பியோ காரின் பெட்டகம் வடிவத்திற்கு உண்டான வரவேற்பை நிராகரிக்கக் கூடாது என்பதற்காக, சிறு சிறு மாற்றங்களுடன் ஸ்கார்பியோ கிளாசிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

mahindra scorpio cars sales growth

ஆக, ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான வெர்சன்களில் தற்சமயம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டின் மொத்த விற்பனை எண்ணிக்கைகள் தான் மேலே நீங்கள் பார்த்தவை ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் ஸ்கார்பியோ கார்கள் கிடைக்கின்றன.

ஸ்கார்பியோ கார்கள் உற்பத்தியில், ஆரம்பத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக 9 இலட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில்தான் அறிவித்தது. முதன்முதலாக 2002இல் முதல் ஸ்கார்பியோ கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த காரின் உற்பத்தியில் வெற்றிக்கரமாக 9 இலட்சம் மைல்கல்லை 21 ஆண்டுகளுக்கு பின் மஹிந்திரா கடந்துள்ளது.

mahindra scorpio cars sales growth

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு மாதத்திற்கு 10 ஆயிரம் ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டால், ஸ்கார்பியோ கார்கள் உற்பத்தியில் 10 இலட்சம் என்கிற இமாலய மைல்கல்லை விரைவாக இன்னும் 1 வருடத்திற்கு உள்ளாகவே மஹிந்திரா கடந்துவிடும். ஆக, ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான பாடி ஸ்டைல்களில் ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்ய மஹிந்திரா முடிவெடுத்தது மிக அருமையான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 21:02 [IST]
English summary
Mahindra scorpio cars sales growth of 24 22 percent in september all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X