இந்திய ராணுவத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடக்கம்! சூப்பர்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic). இந்த காரை இந்திய ராணுவம் (Indian Army) பெரிதும் விரும்புகிறது. எனவே மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.

மொத்தம் 1,850 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களுக்கான ஆர்டரை இந்திய ராணுவம் கொடுத்துள்ளது. இந்த சூழலில், இந்த ஆர்டரின் முதல் பகுதியை மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் மொத்தம் 12 யூனிட்களில் இந்த கார்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Scorpio Classic

தற்போதைய நிலையில், டாடா சஃபாரி (Tata Safari), டாடா ஷெனான் (Tata Xenon), மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) உள்ளிட்ட கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இவற்றுடன் தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களும் இணைந்துள்ளன.

இதன் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்களில் கூறியிருப்பதாவது: நமது பாதுகாப்பு படைகளுக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை டெலிவரி செய்ய தொடங்கியிருப்பது பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

ஆம், இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் எப்போதுமே தயாராக இருப்போம். இவ்வாறு மஹிந்திரா நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை (Price) 13 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16.81 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சற்று விலை உயர்ந்த கார் என்றாலும் கூட, 9 இன்ச் ட்ச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் விளக்குகள் போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளை (Features) எல்லாம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவம் ஒரு இந்திய தயாரிப்பை வாங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயங்களில் ஒன்று. மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு படைகளும் வாங்கி பயன்படுத்தி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 20, 2023, 13:19 [IST]
English summary
Mahindra scorpio classic indian army delivery full details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+