மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை குறைந்த விலையில் வாங்கினால் இப்படிதான் இருக்கும்!! கொஞ்சம் யோசிச்சு வாங்குங்க...

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரின் விலை குறைவான, ஆரம்ப நிலை வேரியண்ட் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிக்காட்டுவது போல் ஸ்கார்பியோ-என் காரின் பேஸ் வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றினுள் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி பார்க்கலாம்.

மஹிந்திரா சமீப காலமாக எஸ்யூவி ரக கார்களை சந்தைக்கு கொண்டுவருவதையே பெரிதும் விரும்பியுள்ளது. இதன் விளைவாக, கடந்த 2022ஆம் வருடத்தில் அறிமுகமான கார், ஸ்கார்பியோ-என் ஆகும். பிரபலமான ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலாக கொண்டுவரப்பட்ட இது பல்வேறு வேரியண்ட்கள் மற்றும் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

mahindra scorpio-n base z2 variant

ஸ்கார்பியோ-என் காரின் பிரபலமான வேரியண்ட் இசட்2 ஆகும். ஆரம்ப நிலை வேரியண்ட்டான இது குறைந்த விலையில் கிடைப்பதால் பலத்தரப்பட்ட மக்களின் சாய்ஸாக உள்ளது. இருப்பினும் ஸ்கார்பியோ-என் இசட்2 காரை தயாரிக்க முடியாமல் மஹிந்திரா போராடி வருகிறது. இதற்கு காரணமும், இசட்2 வேரியண்ட்டிற்கு கிடைக்கும் அதிகப்படியான தேவையே ஆகும். அதாவது, இந்த வேரியண்ட்டையே அதிக பேர் முன்பதிவு செய்கின்றனர்.

ஸ்கார்பியோ-என் காரில் உள்ள ஒரேயொரு குறை என்னவென்றால், இந்த காரை முன்பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட காத்திருக்கின்றனர். அதிலிலும் குறிப்பாக, இசட்2 வேரியண்ட்டிற்கு மிகுந்த கிராக்கி உள்ளது. இத்தகைய வேரியண்ட் தான் தற்போது டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த ஸ்கார்பியோ-என் இசட்2 வேரியண்ட் கார் வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது பெட்ரோல் என்ஜினை கொண்ட ஸ்கார்பியோ-என் இசட்2 கார் என கூறும் இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர், இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி வலுவாக உள்ளதாகவும், இதன் காரணமாகவே இவ்வாறான விலை குறைவான வேரியண்ட்டில் கூட பல்வேறு மாடர்ன் அம்சங்கள் வழங்கப்படுவதாகவும் கூறுவதை கேட்க முடிகிறது.

mahindra scorpio-n base z2 variant

இந்த ஸ்கார்பியோ என் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 எச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் இந்த இசட்2 வேரியண்ட்டின் விலை ரூ.13.05 லட்சம் என விலாகர் கூறுகிறார். மேலும், இந்த எஸ்யூவி காரில் அடையாள டபுள்-பேரல் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், இந்த ஹெட்லைட்கள் பிரோஜெக்டர் லைட் செட்அப்பை கொண்டில்லை எனவும், அதற்கு பதிலாக ஹலோஜன் பல்ப்களை கொண்டுள்ளதாகவும் வீடியோவில் விலாகர் கூறுவதை கேட்கலாம்.

அதேபோல் பேஸ் வேரியண்ட் என்பதால், ஃபாக் விளக்குகள் அல்லது க்ரோம் போன்றவை எதுவும் இல்லை. காரின் பக்கவாட்டில், A, D பில்லர்கள் காரின் உடல் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. காரின் சைடில் எந்த க்ரோம் ஹைலைட்களும் இல்லை. மேட் கருப்பு நிறத்தில் பாடி கிளாடிங்குகள் மட்டுமே உள்ளன. மற்ற வேரியண்ட்களை போல் சக்கரங்கள் 17-இன்ச்சில் தான் உள்ளன என்றாலும், அவை அலாய் சக்கரங்கள் கிடையாது, இரும்பு சக்கரங்களே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குறைந்த விலையிலாவது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கிவிட வேண்டும் என நினைப்போர்க்கு இந்த இசட்2 வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். ஆனால் பிரீமியம் தரத்திலான வசதிகளை எதிர்பார்ப்போர்க்கு இந்த வேரியண்ட் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக, முகப்பு பகுதியில் ஹெட்லைட்களை தவிர்த்து, வேறெந்த விளக்குகளும் இல்லாதது உங்களுக்கு பெரிதும் ஏமாற்றமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 16, 2023, 11:12 [IST]
English summary
Mahindra scorpio n base z2 variant video
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+