மஹிந்திராவின் எதிர்கால யோசனையில் இருக்கும் வாகனங்கள்!! பிராண்ட் மொத்தமா வேற லெவல்ல மாற போகுது!

ஸ்கார்பியோ (Scorpio) என்ற பிரபலமான எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிக்அப் கான்செப்ட் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஸ்கார்பியோ பிக்அப் டிரக் வாகனம் எவ்வாறு இருக்கும் என்பதை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

இந்திய சுதந்திர தினத்தின்போது புதியதாக ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்துவதை மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நாளில் குறைந்தது, தனது புதிய கண்டுப்பிடிப்பை ஆவது மஹிந்திரா வெளிக்காட்டிவிடும். இந்த வகையில், இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில், விஷன் தார்.இ கான்செப்ட், புதிய ஒஜா டிராக்டர்கள் மற்றும் ஸ்கார்பியோ பிக்அப் டிரக் கான்செப்ட்டை மஹிந்திரா வெளியீடு செய்துள்ளது.

mahindra scorpio-n based pickup truck

இவை அனைத்தையும், தென்னாப்பிரிக்காவில் இருந்து மஹிந்திரா நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதில், ஸ்கார்பியோ பிக்அப் கான்செப்ட் ஆனது ஸ்கார்பியோ-என் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'க்ளோபல் பிக்அப்' என்கிற பெயரில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிக்அப் டிரக் கான்செப்ட் வாகனத்தில் ஸ்கார்பியோ-என் காரின் எல்இடி ஹெட்லைட்கள் இருப்பதை காணலாம்.

ஆனால் ஹெட்லைட்டிற்கு அருகாமையில் வழங்கப்படும் டிஆர்எல்-கள், க்ரில், ஃபாக் விளக்குகளுக்கான செங்குத்து வடிவிலான எல்இடி ஸ்ட்ரிப், ரீடோனில் முன்பக்க பம்பர் உள்ளிட்டவை இந்த கான்செப்ட் மாதிரியை ஸ்கார்பியோ-என் காரில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன. பிக்அப் ட்ரக் வாகனம் என்பதால், வாகனத்தின் பின்பக்கத்தில் பொருட்களை ஏற்றி செல்லும் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதி எந்த அளவிற்கு பெரியது என்பதை இரு ஸ்பேர் சக்கரங்களை வைத்து காட்டியுள்ளனர்.

mahindra scorpio-n based pickup truck

பொதுவாகவே, பிக்அப் டிரக்குகள் கரடு முரடான பகுதிகளுக்கு கூட கொண்டு செல்லப்படுகின்றன என்பதால், தரையில் இருந்து வாகனத்தின் அடித்தளம் நன்கு உயரமாக, எளிதில் சேதமடையாத உயரத்தில் வழங்கப்படுவது வழக்கம். அதேபோன்று, ஸ்கார்பியோ என் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிக்அப் டிரக்கிலும் கிரவுண்ட் கிளியரென்ஸ் நன்கு பெரியதாக உள்ளது.

ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்படும் டோர் பேனல்கள், ORVM-கள், விண்டோலைனில் கின்க் உள்ளிட்டவை இந்த பிக்அப் டிரக் கான்செப்ட் வாகனத்திலும் உள்ளன. பிக்அப் டிரக் வாகனம் என்பதால், ஓட்டுனருக்கு எதிர்பக்கத்தில் வாகனத்தின் A-பில்லரில் உயரமான ஸ்னோர்கிலும், மேற்கூரையில் எல்இடி விளக்குகளுடன் ராக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சைடு படிக்கட்டு, ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த கான்செப்ட் மாதிரியை முரட்டுத்தனமாக தோற்றத்தில் காட்டுகின்றன.

பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பேலோடு பே பகுதிக்கும் ஒரு கதவு வழங்கப்பட்டுள்ளது. இந்த பின் கதவில் செங்குத்து வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஸ்கார்பியோ-என் பிக்அப் டிரக்கில் 5ஜி இணைய வசதி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

mahindra scorpio-n based pickup truck

பாதுகாப்பிற்கு, ஏர்பேக் பாதுகாப்பு உள்பட சில அட்வான்ஸான அடாஸ் (ADAS) வசதிகள் வழங்கப்படலாம். இதனால், புதிய ஸ்கார்பியோ-என் பிக்அப் டிரக் வாகனமும் கிளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிக்அப் டிரக்கில் பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கொடுக்கப்படலாம்.

அதேபோல், 4x2 டிரைவ் சிஸ்டத்துடன் இல்லாமல், 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் ஸ்கார்பியோ-என் பிக்அப் டிரக் அறிமுகப்படுத்தப்படும். மற்றப்படி, இந்த பிக்அப் டிரக்கின் அறிமுகம் குறித்த எந்தவொரு தகவலையும் மஹிந்திரா வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பிக்அப் டிரக்கை 2026ஆம் ஆண்டிற்கு முன்னதாக மஹிந்திரா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தற்போது தென்னாப்பிரிக்காவில் வெளியீடு செய்யப்பட்டு இருப்பது ஸ்கார்பியோ-என் காரின் அடிப்படையிலான பிக்அப் டிரக் கான்செப்ட் மாதிரியே ஆகும். அதாவது, இந்த கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து பிக்அப் டிரக்கை மஹிந்திரா இனி உருவாக்கும். ஆதலால், மேலே பதிவிடப்பட்டுள்ள படங்களில் இருப்பதை போன்று தான் ஸ்கார்பியோ என் பிக்அப் டிரக் இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. புது புது சோதனைகளை செய்து, சிலவற்றை மஹிந்திரா மாற்றலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 16, 2023, 11:45 [IST]
English summary
Mahindra scorpio n based pick up truck concept revealed
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X