இந்தியாவின் மானத்தை வாங்கிய மஹிந்திரா கார்!! ஆஸ்திரேலியா காரங்க என்ன நினைச்சி இருப்பாங்க...

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) கார் ஆஸ்திரேலியன் என்சிஏபி (ANCAP)-இல் பூஜ்ஜிய மதிப்பெண்களை பெற்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பொதுவாகவே, மஹிந்திரா கார்கள் தரமானவை என்கிற பேச்சு இந்தியாவில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவில் இவ்வாறான மதிப்பெண்கள் கிடைத்திருப்பது மஹிந்திரா நிறுவனத்திற்கு பெரிய ஷாக்கிங்காக இருக்கும்.

கார் என்ன மைலேஜ் கொடுக்கிறது என்று பார்த்து வாங்கிய காலம் போய், என்சிஏபி-இல் என்ன மதிப்பெண்ணை பெற்றுள்ளது என்று பார்த்து வாங்கும் காலத்தில் உள்ளோம். இதற்காகவே, க்ளோபல் என்சிஏபி, லத்தீன் என்சிஏபி, யூரோ என்சிஏபி என ஏகப்பட்டவை உள்ளன. நமது இந்திய அரசாங்கம் கூட தனக்கென பாரத் என்சிஏபி-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

mahindra scorpio-n obtains 0 Star

பாரத் என்சிஏபி இன்னும் செயல்பட துவங்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கான என்சிஏபி எப்போதில் இருந்தோ புது கார்களை சோதனை செய்து மதிப்பெண்களை வழங்கி வருகிறது. ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் கார் உட்படுத்தப்பட்டது. இந்தியாவை தாண்டி, மஹிந்திரா நிறுவனத்திற்கு பெரிய மார்க்கெட்டாக இருப்பது ஆஸ்திரேலியா எனலாம்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் அந்த நாட்டில் மஹிந்திரா நிறுவனத்தின் அம்பாசடார் ஆவார். சமீபத்தில்தான், மேத்யூ ஹைடன் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவ்வாறான ஒரு செய்தி ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்துள்ளது. க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்ற கார் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஆகும்.

mahindra scorpio-n obtains 0 Star

ஆனால், அந்த நல்ல மதிப்பெண்ணை ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் பெறவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் இந்த இரு நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் வேரியண்ட்களும் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் 6 இருக்கைகளுடனும், நியூசிலாந்தில் 7 இருக்கைகளுடனும் கிடைக்கிறது. ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் 6-இருக்கை மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் தான் உட்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் உட்படுத்தப்படும் ஸ்கார்பியோ-என் காரில் அடாஸ் வழங்கப்படுகிறது.

mahindra scorpio-n obtains 0 Star

அத்துடன், இந்த காரில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் லேன் சப்போர்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. ஆனால், டிரைவர் மானிடரிங் சிஸ்டம், ஸ்பீடு லிமிட் இன்ஃபெர்மேஷன் ஃபங்க்‌ஷன், குழந்தை இருப்பதை கண்டறியும் சிஸ்டம், 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளில் அமர்ந்திருப்போர் சீட்பெல்ட் அணியவில்லை என்றால் அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும் சிஸ்டம் உள்ளிட்டவை இல்லை.

ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் ஸ்கார்பியோ-என் காருக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 40க்கு வெறும் 17.67 மதிப்பெண்களும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 49க்கு 39.27 மதிப்பெண்களும், பாதசாரிகள் பாதுகாப்பில் 14.94 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உதவி தொழிற்நுட்பங்களில் 18க்கு பூஜ்ஜிய மதிப்பெண் மட்டுமே இந்த மஹிந்திரா காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை முழுவதுமாக பெற்ற ஒரு கார் மற்றொரு என்சிஏபி-இல் பூஜ்ஜிய மதிப்பெண்களை பெற்றிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து, என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களும் எந்த அளவிற்கு கடுமையாக்கப் பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 19:10 [IST]
English summary
Mahindra scorpio n obtains 0 star ratings in australian ncap check all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X