Mahindra Scorpio N Z6: இப்படி ஒரு நல்ல கம்பெனிய மை போட்டு தேடினாலும் கிடைக்காது! நியாயமாக நடந்த மஹிந்திரா!
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இந்த கார் குறித்த தகவல்கள் வெளியாகும் போதே இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. இந்த கார் அறிமுகமாகப்போகிறது என அறிவிக்கப்பட்டவுடன் பலர் இந்த காரை வாங்கத் தயாராகிவிட்டனர். இதனால் புக்கிங் துவங்கியது முதல் பலர் புக் செய்ய துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இந்த ஸ்கார்பியோ என் காரை புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரியை அந்நிறுவனம் துவங்கியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியதும் ஏகப்பட்ட புக்கிங் வந்ததால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமானது. அதே நேரம் ஸ்கார்பியோ கிளாசிக்கிற்கு காத்திருப்பு காலம் குறைந்தது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் மொத்தம் 6 மற்றும் 7 சீட்டர் என இரண்டு வெர்ஷனாக வருகிறது. இசட் 2, இசட் 4, இசட் 6, இசட் 8 மற்றும் இசட் 8எல் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார்கள் விற்பனையாகி வருகிறது இந்த கார் ரூ12.74 லட்சம் முதல் ரூ24.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தான் இந்த காருக்கான விலை ஏற்றப்பட்டது.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இதுவரை டாப் வேரியன்ட்களை புக்கிங் செய்தவர்களுக்குத் தான் காரை டெலிவரி செய்து வந்தது. இசட்8 வேரியன்ட்கள் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் இசட் 6 வேரியன்டின் விற்பனையைத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஸ்கார்பியோ இசட் 6 வேரியன்ட் முதல் கார் டெலிரி செய்யப்பட்டது.

மஹிந்திரா நிறுவனம் கார்களை புக்கிங் செய்யும் போது பிரைஸ் புரோடெக்ஷனை வழங்குகிறது. அதாவது குறிப்பிட்ட நபர் காரை புக்கிங் செய்யும் போது என்ன விலையோ அதே விலையில் தான் அவர்டெலிவரி செய்யும் போது வழங்குகிறது. டெலிவரியின் போது விலை அதிகமானாலும் கூடுதல் பணத்தை மஹிந்திரா வசூலிப்பதில்லை.
இந்நிலையில் இந்த இசட் 6 வேரியன்டை புக்கிங் செய்த வாடிக்கையாளர் இந்த இசட் 6 எம்டி டீசல் இன்ஜின் ஸ்கார்பியோ என் காரை புக் செய்யும் போது இதன் காரின் விலை ரூ14.99 லட்சம் தான். ஆனால் தற்போது விலையேற்றத்திற்குப் பிறகு இந்த கார் ரூ18.63 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. ஆனால் மஹிந்திரா பிரைஸ் புரோடெக்ஷன் வழங்குவதால் இப்பொழுது டெலிவரி செய்யப்பட்ட காருக்கு அவர் புக் செய்யும் போது இருந்த விலையிலேயே காரை வழங்கியுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட் 6 வேரியன்டை பொருத்தவரை அலாய் வீல் கிடையாது. ஆனால் இந்த காரை வாங்கும் போது இந்த காருக்கு டீலர்ஷிப் தரப்பிலிருந்து அலாய் வீல் அப்கிரேடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் டெலிவரி வீடியோவை பார்க்கும் போது இதில் ஃபாக் லேம்ப், டிஆர்எல், புரோஜெக்டர் ஹெட்லைட், ரெயின் சென்சிங் வைப்பர் ஆகிய எதுவும் இல்லை.
மஹிந்திரா நிறுவனத்தில் பொலிரோவிற்கு பிறகு அதிகமாக விற்பனையாகும் கார் என்றால் ஸ்கார்பியோ என் கார் தான். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 6950 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2022 பிப் விற்பனையான 2610 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 166.28 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஸ்கார்பியோ என் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது198 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இது 173 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு இன்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த இன்ஜின் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுப்பாட்டிற்குத் தகுந்தார் போல மாற்றப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் காரை பொருத்தவரை இருப்பதிலேயே அதிகபட்ச காத்திருப்பு காலம் என்றால் இசட் 4 வேரியன்டிற்கு தான் தற்போது 65 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. குறைவான காத்திருப்பு காலம் இசட் 8 எல் வேரியன்டிற்கு தான் 24-26 வரை தான் இதன் காத்திருப்பு காலம் இருக்கிறது.
இசட் 6 மற்றும் இசட் 8 வேரியன்ட்களக்கு 55-60 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இசட் 2 வேரியன்டிற்கு காத்திருப்பு காலம் 52-54 வாரங்கள் வரை இருக்கிறது. இந்த காருக்கான வெற்றி என்னவென்றால் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட 30 நிமிடங்களில் 1 லட்சம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டனர். இன்றும் இந்த காருக்கான புக்கிங் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் இந்த காரை தயாரிப்பில் உள்ள சிக்கல் மற்றும் இந்த காருக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த காருக்கு அதிகமான காத்திருப்பு காலம் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்திலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார் எக்ஸ்யூவி 700 ரியர் வீல் டிரைவ் கார் தான். 75 வாரங்கள் வரை இந்த காருக்கான காத்திருப்பு காலம் என்பது இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2.33 லட்சம் கார்களுக்கான புக்கிங்கை பெற்றுக்கொண்டு காரை டெலிவரி செய்யாமல் இருக்கிறது. இருப்பதிலேயே அதிகம் ஸ்கார்பியோ என் கார் தான். 1.19 லட்சம் ஸ்கார்பியோ என் கார்கள் இதுவரை டெலிவரி செய்யப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








