ஷோரூம்ல வாங்கிருந்தாலே 16 லட்ச ரூபாவோட முடிஞ்சிருக்கும்.. கோடி ரூபாவ கொட்டி கொடுத்து இ-காரை வாங்கிய இந்தியர்!

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஒரே ஒரு ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து வாங்கி இருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் ஒன்-ஆஃப் எடிசனாக உருவாக்கப்பட்ட எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் விற்பனைக்கான ஏலம் மிக சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சில லட்ச ரூபாய் மட்டுமே மதிப்புக் கொண்ட இந்த மின்சார காரை இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர், 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எக்ஸ்யூவி 400

இந்த விலைக்கு சொகுசு காரையே வாங்கியிருக்கலாம்

இந்த விலைக்கு பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் சொகுசு வசதிகள் நிறைந்த ஆடம்பர வாகனத்தையே வாங்கியிருக்கலாம். இருப்பினும், தொழிலதிபர் ஏலத்தில் மிகக் கடுமையான போட்டிகளுக்கு இடையில் எக்ஸ்யூவி 400 ஸ்பெஷல் எடிசனை வாங்கி இருக்கின்றார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கருணாகர் குந்தவரம் ரெட்டி எனும் நபரே எக்ஸ்யூவி 400 ஸ்பெஷல் எடிசனை வாங்கியவர் ஆவார்.

கோடியை கொட்டியது வீண் இல்ல

ஏலத்தில் வெற்றிப் பெற்றதை காருக்கான சாவி கருணாகர் இடத்தில் சமீபத்திலேயே ஒப்படைக்கப்பட்டது. இதனை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவே அவரிடத்தில் வழங்கினார். வழக்கமான எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் கணிசமான கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டதே இந்த ஒன்-ஆஃப் எடிசன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் ஆகும். ஒன்றே ஒன்றுதான் என்பதை குறிக்கும் சொல்லே ஒன்-ஆப் எடிசன் ஆகும்.

எக்ஸ்யூவி 400

ஒரே ஒரு யூனிட் தயாரிப்பு

ஆமாங்க, நீங்க நினைப்பது சரிதான், தற்போது விற்கப்பட்டு இருக்கும் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400-இன் ஒரே ஒரு யூனிட் மட்டுமே தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. அதுவும் தற்போது விற்பனையாகிவிட்டது. ஆகையால், இனி எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த காரை வாங்க முடியாது என்கிற சூழல் உருவாகி உள்ளது. இதன் விளைவாகவே கோடி ரூபாயைக் கொட்டி கொடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எக்ஸ்யூவி 400 ஸ்பெஷல் எடிசனை வாங்கி இருக்கின்றார்.

சிறப்பு அலங்காரம்

வழக்கமான எக்ஸ்யூவி 400-ஐக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்புகள் கொண்டதாகவும், வசதிகள் கொண்டதாகவும் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ஜ் திறனில் இதில் எந்த மாற்றமும் இருக்காது. அலங்காரம் மற்றும் கவர்ச்சி விஷயத்தில் மட்டுமே நம்மால் வித்தியாசத்தைக் காண முடியும்.

எக்ஸ்யூவி 400

குறிப்பாக, நீல நிற ஷேட் மற்றும் செப்பு நிறத்தினாலான அணிகலன்களை அதிகளவில் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400இல் காண முடியும். இதுதவிர, ரிம்ஜிம் தது மற்றும் போஸ் எனும் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் அதிகளவில் இந்த காரில் காண முடியும். இது மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸ் மற்றும் பேஷன் டிசைனர் ரிம்சிம் தது ஆகியோர் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

போன மாசம் தொடங்கிய ஏலம்

இந்த காருக்கான ஏலம் கடந்த ஜனவரி 26 காலை 11 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து, அதே மாதம் 31 ஆம் தேதி வரை ஏலம் நடைபெற்றது. காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் சில சிறப்பு வசதிகளை நம்மால் காண முடிகின்றது. பிரத்யேக ஃபேப்ரிக்கை (துணியை)க் கொண்டு ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 400 அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இருக்கை, ஹெட்ரெஸ்ட் மற்றும் கதவுகளின் சைடு பகுதி என பலவற்றில் அழகான அந்த துணி அலங்கரிப்பை நம்மால் காண முடிகின்றது.

எக்ஸ்யூவி 400

456 கிமீ பயணிக்கலாம்

மேலும், வழக்கமான எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் போலவே சிறப்பு பதிப்பு எக்ஸ்யூவி 400லும், 39.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 456 கிமீ ரேஞ்ஜை தரும். 150 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே எக்ஸ்யூவி 400 இவியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுவே, சிறப்பு பதிப்பு எக்ஸ்யூவி 400லும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 13, 2023, 11:50 [IST]
English summary
Mahindra special edition xuv 400 sold
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X