இந்திய ராணுவத்திற்கு டெரிவரி கொடுக்கப்பட்ட மஹிந்திரா ஆர்மடோ.. இப்பவே எதிரிநாடுகளுக்கு அல்லு விட்ருக்கும்!

எதிரி நாடுகளை அல்லு விட செய்யும் தரமான போர் வாகனத்தை இந்திய ராணுவத்திற்கு மஹிந்திரா (Mahindra ) நிறுவனம் டெலிவரி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்ப்பதற்கே மிரள வைக்க வகையில் இருக்கும் உருவம் கொண்டிருக்கும் அந்த வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியா ராணுவத்திற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆர்மடோ (Armado) போர் வாகனம் ராணுவத்திடம் டெலிவரி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டிருக்கும் இந்த வாகனம் முழுக்க முழுக்க மஹிந்திரா (Mahindra ) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mahindra armado

இது ஓர் ஏஎல்எஸ்வி (Armoured Light Specialist Vehicle) ரக வாகனமாகும். உள்நாட்டிலேயே டிசைன் செய்யப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஏஎல்எஸ்வி ரக வாகனம் இது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கடந்த காலங்களில் இந்த மாதிரியான வாகனங்களுக்காக வெளிநாடுகளின் கைகளையே இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த சூழலிலேயே தற்போது மஹிந்திராவே இந்த மாதிரியான வாகன உற்பத்தியை கையில் எடுத்து அதை சிறப்பாக தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றது. அவ்வாறு தரமான மற்றும் குறைவான பராமரிப்பைக் கொண்ட வாகனமாக நிறுவனம் தயாரித்து இருக்கும் ஏஎல்எஸ்வி ரக வாகனமே ஆர்மடோ ஆகும்.

Mahindra armado alsv delivered to indian army

இதனை மாடுலர் வாகனமாக மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. ஆகையால், பராமரிப்பு மட்டுமல்ல பயன்படுத்துவதிலும் இது மிக சுலபமானதாக இருக்கும். இதுதவிர, தேவைக்கேற்ப வாகன பயன்பாட்டை மாற்றிக் கொள்ளவும் இதன் மாடுலர் வசதி மிகுந்த உதவியாக இருக்கும். அதாவது, ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் வாகனமாக அல்லது அவசரநிலையின்போது எதிரிகளைத் தாக்குவதற்கான வாகனமாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், வீரர்களுக்கு முழு பாதுகாப்பை வழங்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் ஆர்மடோ ஏஎல்எஸ்வி-யில் STANAG Level I Ballistics-ம், மேற்பரப்பில் STANAG Level II Ballistics-ம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது வெடிகுண்டு, துப்பாக்கு குண்டு என அனைத்தில் இருந்தும் வீரர்களைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக 8 வீரர்களால் மஹிந்திரா ஆர்மடோவில் பயணித்துக் கொள்ள முடியும். இதுதவிர, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும்கூட இதில் ஸ்டோர் செய்துக் கொள்ள முடியும். அந்தவகையில், ஆயிரம் கிலோ வெடி மருந்துகளைக் கூட இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்ல முடியும்.

அதுவும் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியும். பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. இந்த அளவிற்கு திறமையான வாகனமே மஹிந்திரா உள் நாட்டிலேயே தயாரித்து இருக்கும் ஆர்மடோ ஆகும். மேலும், அனைத்து கரடு-முரடான சாலைகளையும் சமாளிக்கும் வசதிக் கொண்ட டயர், எஞ்ஜின் மற்றும் உருவ அமைப்பையும் இந்த வாகனத்திற்கு மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.

குறிப்பாக, 3.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6 சிலிண்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் அதிகபட்சமாக 213 பிஎச்பியை 3,600 ஆர்பிஎம்மிலும், 500 என்எம் டார்க்கை 2,000 ஆர்எம்மிலும் வழங்கும் திறன் கொண்டது. இந்த வாகனம் டீசலில் மட்டுமல்ல நேட்டோ என்றழைக்கப்படும் பல்வேறு வகையான எரிபொருட்களிலும் அது இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

4 ஸ்பீடு ஆட்டோமோட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஆல் ரவுண்ட் இன்டிபென்டனட் சஸ்பென்ஷன் மற்றும் இரு ஆக்ஸில்களிலும் வித்தியாசமான லாக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சென்ட்ரல் டயர் இன்ஃப்ளேஷன் சிஸ்டம் மற்றும் ஏர் ஃபில்டரேஷன் யூனிட் ஆகியவையும் ஆர்மடோவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், செல்ஃப் ரெகவரி அம்சமும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த தயாரிப்பு உலக நாடுகளின் ஏஎல்எஸ்வி வாகனங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதனால்தான் இந்த வாகனம் எதிரி படைகளை நடுங்கச் செய்யும் என உறுதியுடன் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளையே மிரள செய்யும் வகையில் ஆர்மடோவை மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, எதிரி நாடுகளுக்கு அல்லு விட செய்யும் வகையில் இதன் தோற்றமும், வடிவமைப்பு யுக்தியும் உள்ளது. இந்த வாகனம் இந்தியாவின் மிக மோசமான எல்லை பகுதியைச் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இந்தியர்கள் அனைவரையும் பெருமடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 20, 2023, 16:00 [IST]
English summary
Mahindra started delivery of armado alsv to the indian army
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+