இந்த சரக்கு வண்டியோட விலை இவ்ளோதானா! மைலேஜ் அதை விட ஆச்சரியப்படுத்துதே! ஓனர்களுக்கு தன லாபம் கொட்ட போகுது!

மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ (Mahindra Supro CNG Duo), இன்று (ஜூன் 8) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை (Price) வெறும் 6.32 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ட்யூயல்-ஃப்யூயல் (2 எரிபொருட்களில் இயங்க கூடியது) சிறிய வர்த்தக வாகனம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக லாபத்தை வழங்க கூடிய பல்வேறு வசதிகள், புத்தம் புதிய மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

Mahindra Supro CNG Duo

மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ வாகனத்தில் பொருத்தப்பட்டிருப்பது, 909 சிசி இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) என 2 எரிபொருட்களில் இயங்கும். அத்துடன் இந்த 2 எரிபொருட்கள் மூலமாகவே இந்த வாகனத்தை 'ஸ்டார்ட்' செய்ய முடியும் என்பதும் முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும்.

அதே நேரத்தில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26.8 பிஹெச்பி பவர் மற்றும் 60 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் சக்தியானது, 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலமாக, முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 23.35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mahindra Supro CNG Duo Deck

இந்த வாகனத்தில், மொத்தம் 2 சிஎன்ஜி டேங்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளவு ஒட்டுமொத்தமாக 75 கிலோ சிஎன்ஜி ஆகும். இதுதவிர 5 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கும் மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் ஹெவி லோடுகளையும் கொண்டு செல்ல முடியும்.

இந்த வாகனத்தின் பேலோடு (Payload) 750 கிலோ ஆகும். மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ வாகனத்தில் 12 இன்ச் ஸ்டீல் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 158 மிமீ ஆகும். டைமண்ட் ஒயிட் மற்றும் டீப் வார்ம் ப்ளூ என மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில், மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ வாகனம் கிடைக்கும்.

3 வருடங்கள்/80 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி உடன் மஹிந்திர சுப்ரோ சிஎன்ஜி டியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள், சிறப்பான விலை மற்றும் நல்ல மைலேஜ் உடன் மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ விற்பனைக்கு வந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒரு சிறிய வர்த்தக வாகனத்தை வாங்கலாம் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ நல்ல தேர்வாக இருக்கும். சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய என்பதால், உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 14:23 [IST]
English summary
Mahindra supro cng duo launched price mileage payload and all details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+