எப்போதும் இப்படி நடந்தது கிடையாது!! மஹிந்திரா ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா ஆட்டோ (Mahindra Auto) கடந்த அக்டோபர் மாதத்தில் அதன் எஸ்யூவி கார்கள் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் அறிக்கையை கார்களின் விற்பனை எண்ணிக்கைகளுடன் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் என்று பார்த்தால், நிச்சயம் அதில் ஒன்றாக மஹிந்திரா இருக்கும். குறிப்பாக, எஸ்யூவி கார்கள் விற்பனையில் மஹிந்திரா கொடிக் கட்டி பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், மஹிந்திரா பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படுபவை அனைத்தும் எஸ்யூவி ரக கார்களாகும்.

mahindra suv cars sales records

இந்திய மக்கள் சமீப காலமாக உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளனர். இதனால், மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சிக் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரை காட்டிலும் கடந்த அக்டோபரில் மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனை ஆனது 36% அதிகரித்துள்ளது.

அதாவது, சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான எஸ்யூவி கார்களை கடந்த மாதத்தில் கூடுதலாக மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை 43,708 ஆகும். ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 32,226 எஸ்யூவி கார்களின் விற்பனையை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்திருந்தது.

mahindra suv cars sales records

மொத்தமாக இந்த 2023-24 நிதியாண்டில் (2023 ஏப்ரல் - அக்டோபர்) 2,58,612 மஹிந்திரா எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டில் இதே 7 மாதங்களில் 1,99,278 எஸ்யூவி கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. அதாவது, அந்த சமயத்தில் மஹிந்திரா எஸ்யூவி கார்கள் விற்பனை எண்ணிக்கை 2 இலட்சத்தை கூட தொடவில்லை.

இந்த வகையில் கடந்த 7 மாதங்களில் மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனை ஆனது 30% அதிகரித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், பயணிகள் வாகனங்கள் பிரிவை பொறுத்தவரையில், மஹிந்திரா நிறுவனம் அதன் எஸ்யூவி கார்களையே முழுவதுமாக நம்பி உள்ளது. மஹிந்திரா பிராண்டில் இருந்து ஹேட்ச்பேக், செடான் கார்கள் எதுவும் தற்சமயம் விற்பனையில் இல்லை.

mahindra suv cars sales records

அதேபோல், இந்த நிறுவனத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்களும் தற்சமயம் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 72 வேன்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த விற்பனை எண்ணிக்கைகள் யாவும் இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்தவை மட்டுமே ஆகும். கார்கள் மட்டுமின்றி, 3-சக்கர வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் கனரக வாகனங்களும் மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் கார்கள் விற்பனையிலும் தான் ஒரு தனிப்பெரும்பான்மையான நிறுவனம் என்பதை நிரூபித்து வருகிறது. இதற்கு மஹிந்திரா நிறுவனம் கையில் எடுத்துள்ள தந்திரம் தான் இதில் ஹைலைட்டே. அதாவது, எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்வது என்கிற மஹிந்திராவின் தந்திரம். ஏனெனில், தற்சமயம் இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 23:31 [IST]
English summary
Mahindra suv cars sales records highest ever full details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X