இந்தியாவே எதிர்பார்க்கும் இந்த காரை சென்னையில டெஸ்ட் பண்ணிருக்காங்க! இப்ப பார்க்கவே செமயா இருக்குதே!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 இவி கார் சென்னையில் டெஸ்ட்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக களம் இறங்கவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான டிரெண்ட் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் காரை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதில் தற்போது டாடா நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.

Mahindra XUV 700 Electric Testing

இந்நிலையில் டாடா நிறுவனத்திற்குப் போட்டியாக மஹிந்திரா நிறுவனமும் தனது கார்களை களம் இறக்கத் தயாராகி வருகிறது. தற்போது டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை களம் இறக்கப் போகிறது. இதற்குப் போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரின் எலெக்டரிக் வெர்ஷனை உருவாக்கி வருகிறது.

இந்த கார் சென்னையில் சில பகுதியில் டெஸ்டிங் செய்யப்பட்டதாக ரஷ்லேன் நிறுவனம் அதன் ஸ்பை புகைப்படங்களை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களைத் தான் தற்போது நீங்கள் இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். சென்னையில் சில பகுதிகளில் இந்த கார் டெஸ்ட் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Mahindra XUV 700 Electric Testing

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி 700 காரை இன்குலோ பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த பிளாட்ஃபார்மில் மொத்தம் 5 கார்கள் உருவாக்கப்படவுள்ளது. 2024 அல்லது 2025ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வரும் போது தான் இந்த கார் குறித்த தொழிற்நுட்ப தகவல்கள் எல்லாம் வெளியாகும்.

சமீபத்தில்தான் பிஇ .05 என்ற மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் டெஸ்டிங்கில் ஈடுபட்டதாகப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது எக்ஸ்யூவி.08 எனவ்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி 700 காரை தற்போது களத்தில் இறக்கியுள்ளனர். அடுத்தடுத்து டெஸ்டிங் செய்யப்படுவதால் இதன் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra XUV 700 Electric Testing

இந்த காரின் பின்பக்கம் ஆரஞ்சு நிற கேபிள்களை காண முடிந்தது. பொதுவாக எலெக்ட்ரிக் கார்களில் நீல நிற கேபிள் இருந்தால் அது 36வோல்ட் டூ 42 வோல்ட் வரையிலான பவரை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும். ஆரஞ்ச் நிற கேபிள் என்றால் 1000 வோல்ட் வரை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும். இதை ஹை வால்டேஜ் கேபிள் என அழைப்பார்கள். இதனால் காரில் அதிக பவர் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் பின்பக்கம் பார்க்கும் போது. பின்பக்கம் மோட்டார் செட்டப் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இப்படி இரந்தால் பின்பக்கம் மோட்டார் செட்டப் செய்யப்பட்ட ரீயர் வீல் டிரைவ் செட்டப்பாக இருக்கலாம். இல்லை என்றால் இரண்டு பக்கமும் மோட்டார் செட்டப் செய்யப்பட்ட டூயல் மோட்டார் செட்டப் உடன் ஆல் வீல் டிரைவ் காராக வெளியாகுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது போக இதன் பின் வீலிலும் தனித்துவமான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கார் பள்ள மேட்டில் சென்றாலும் உள்ளே அதிர்வுகள் வராமல் பாதுகாக்கும். இந்த பின்பக்க சஸ்பென்சன் டாடா இண்டிகா மற்றும் இண்டிகோ கார்களில் இருந்தது. ஆனால் இது தற்போது அரிதாக விட்டது. சொகுசு மற்றும் பிரிமியமான பிராண்ட்களில் மட்டுமே தற்போது கிடைக்கிறது.

இந்த கார் தயாரிக்கப்படும் இன்குலோவ் பிளாட்ஃபார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்இபி இவி பிளாட்ஃபார்மாகும். இதை தான் மஹிந்திரா நிறுவனம் வாங்கி வேறு பெயரை வைத்துள்ளது. இந்த எக்ஸ்யூவி 700 எலெக்ட்ரிக் கார் 60 கிலோ வாட் அல்லது 80 கிலோ வாட் ஹவர் பேட்டரியில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பம், ஃப்ளாஷ் டோர் ஹேண்டில்கள், 5 ஸ்டார் கிராஷ் டேட்டட் பாடி ஷெல், பானரோமிக் சன் ரூஃப், மெமரி ஃபங்சன் உடன் கூடிய பவர் அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், டேஷ் போர்டில் 3 ஸ்கிரீன் லே அவுட், ஆகியன புரோடெக்ஷன் மாடலிலேயே இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்யூவி 700 எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை எக்ஸ்யூவி 700 காரில் உள்ள அதே டிசைன் தான் இதிலும் உள்ளது. இந்த கார் ரூ30 லட்சம் என்ற விலையில் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 17:13 [IST]
English summary
Mahindra testing xuv 700 electric car in chennai
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X