இன்னும் ரெண்டே நாள்தான்! தரமான சம்பவத்தை செய்ய போகும் மஹிந்திரா! எதிர்பார்ப்பு எக்கசக்கமா எகிறி கிடக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில், தார் எஸ்யூவி காரின் 4x2 வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா தார் 4x2 வெர்ஷன், வரும் ஜனவரி 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா தார் 4x2 மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இன்னும் ரெண்டே நாள்தான்! தரமான சம்பவத்தை செய்ய போகும் மஹிந்திரா! எதிர்பார்ப்பு எக்கசக்கமா எகிறி கிடக்கு!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இதுதவிர மஹிந்திரா தார் 4x2 வெர்ஷனில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 117 பிஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். AX OPT மற்றும் LX என மொத்தம் 2 வேரியண்ட்களில், மஹிந்திரா தார் 4x2 வெர்ஷன் விற்பனை செய்யப்படும்.

இவ்ளோ வசதிகளா!

எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிஃப்ரன்சியல், ரோல் ஓவர் மிட்டிகேஷன் உடன் இஎஸ்பி, ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளை மஹிந்திரா தார் 4x2 வெர்ஷன் பெற்றிருக்கும். இதுதவிர ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட்கள் மற்றும் ப்ளூசென்ஸ் ஆப் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும்.

இன்னும் ரெண்டே நாள்தான்! தரமான சம்பவத்தை செய்ய போகும் மஹிந்திரா! எதிர்பார்ப்பு எக்கசக்கமா எகிறி கிடக்கு!

புதிய கலர் ஆப்ஷன்கள்!

மேலும் ப்ளாசிங் ப்ரோன்ஸ் மற்றும் எவரெஸ்ட் ஒயிட் என 2 புதிய கலர் ஆப்ஷன்களும் மஹிந்திரா தார் 4x2 வெர்ஷனில் வழங்கப்படவுள்ளன. ஆனால் மஹிந்திரா தார் 4x2 வெர்ஷனின் விலை எவ்வளவு? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. வரும் ஜனவரி 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வருகிறது எலெக்ட்ரிக் கார்!

மஹிந்திரா நிறுவனத்தை பற்றி இன்னும் பல்வேறு செய்திகள் இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் விலைகள் நடப்பு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காருடன், மஹிந்திரா எக்ஸ்யூவி400 போட்டியிடும்.

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், 39.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 456 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான ரேஞ்ச், அட்டகாசமான வசதிகள் ஆகிய காரணங்களால்தான், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra thar 4x2 launch date january 9
Story first published: Friday, January 6, 2023, 23:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X