மினி தியேட்டர் அளவுக்கு ஸ்க்ரீன் இருக்குங்க உள்ளே!! புதிய மஹிந்திரா தார் வாகனத்தை எந்த குறையும் சொல்ல முடியாது
5-கதவு மஹிந்திரா தார் (5-Door Mahindra Thar) வாகனத்தின் உட்பக்க கேபின் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும் என படங்கள் உடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின்படி, மஹிந்திரா தார் வாகனத்தின் உட்பக்க கேபின் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்துக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் அதன் தார் வாகனத்தை 5 கதவுகளுடன் அறிமுகப்படுத்தவுள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், கடந்த சில மாதங்களாக 5-கதவு தார் வாகனம் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அப்போதெல்லாம் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருக்கும்.

இதனால், சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படும் 5-கதவு தார் வாகனத்தின் சோதனை மாதிரியை படம்பிடித்தாலும், அதன் தோற்றத்தை பற்றி அறிய முடியாது. ஆனால் தற்போது, மஹிந்திரா தார் 5-கதவு வாகனத்தின் உட்பக்க கேபினின் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த படங்களின் மூலம், இந்த புதிய தார் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்படலாம் என்பது குறித்த ஓர் புரிதல் நமக்கு கிடைத்துள்ளது.
இணையத்தில் கசிந்துள்ள இந்த படங்களில், தார் வாகனத்தின் கேபின் மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காரினுள் பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. அளவை வைத்து பார்த்தால், இது 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையாக இருக்கலாம். இன்றைய மாடர்ன் எஸ்யூவி கார்களில் டேஸ்போர்டில் இத்தகைய பெரிய திரை வழங்கப்படுவது சாதாரணமாகி விட்டது.

தற்போதைய 3-கதவு மஹிந்திரா தாரில் 7-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. தற்போதைய 3-கதவு தார் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருந்தாலும், உள்ளே டச் ஸ்க்ரீன் சிறிய அளவில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, இன்ஃபோடெயின்மெண்ட் திரை சரிவர பயன்படுத்த முடிவதில்லை என சில வாடிக்கையாளர்கள் கூற முடிகிறது.
அதேபோல், 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுவதால், மஹிந்திரா தார் வாகனத்தில் ஏறி பின் இருக்கையில் அமர்வதும், இறங்குவதும் சற்று கடினமாக உள்ளதென சில வாடிக்கையாளர்கள் கூற கேட்க முடிகிறது. 5-கதவு தார் வாகனத்தில் பெரிய டச் ஸ்க்ரீனை மேம்படுத்தப்பட்ட யூஸர் இண்டர்ஃபெரன்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் எதிர்பார்க்கிறோம். இதனால், தற்போதை காட்டிலும் நன்கு எச்.டி தரத்தில் திரை காட்சி கிடைக்கும்.

இன்ஃபோடெயின்மெண்ட் திரையை போல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் நன்கு பெரியதாக உள்ளது. ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரிலும் காணலாம். இந்த பெரிய திரைகளுக்கு ஏற்ப 5-கதவு தார் வாகனத்தின் உட்பக்க டேஸ்போர்டில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறிப்பாக, முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ம்ரெஸ்ட்டுக்கு கீழ் வழங்கப்பட்டுள்ள ஏசி பின் இருக்கை பயணிகளுக்கானது ஆகும். மற்றப்படி, ஏசி காற்றை வழங்கும் ஏசி வெண்ட்ஸ், டேப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள், ரோட்டரி டயல்கள் மற்றும் வழக்கமான பொத்தான்கள் உள்ளிட்டவை 3-கதவு தாரில் இருந்து அப்படியே வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னிக்கு போட்டியாக விளங்குவதால், எப்படியாவது 5-கதவு தார் வாகனத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற முனைப்பில் மஹிந்திரா உள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை வைத்து பார்த்தால், உட்பக்க தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் 5-கதவு தார் சிறப்பானதாக இருக்கும்.
Source: Carversal


Click it and Unblock the Notifications









