மாருதி சுஸுகிக்கு போட்டியா மஹிந்திரா உருவாக்கும் வாகனம்!! இரகசியமா இரவில் சோதனை... படங்கள் லீக்!

5-கதவுகளை கொண்ட மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் மீண்டும் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் தார் 5-கதவு வாகனம் குறித்து நமக்கு தெரிய வந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபலமான அட்வென்ச்சர் ரக ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம், மஹிந்திரா தார் ஆகும். ஆனால், தற்போதைக்கு 3 கதவுகளுடன் மட்டுமே தார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தாருக்கு போட்டியாக மாருதி சுஸுகி களமிறக்கிய ஜிம்னி 5 கதவுகளுடன் விற்பனை செய்யப் படுகிறது.

mahindra thar 5-door vehicle spotted

3 கதவுகளை கொண்டிருப்பதால், மஹிந்திரா தாரில் ஏறுவதும், இறங்குவதும் சற்று சிரமமாக உள்ளதாக தாரை வாங்கிய சில கஸ்டமர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. இந்த பிரச்சனையை சரிச்செய்யும் விதமாக 5 கதவுகளுடன் தார் வாகனம் ரெடியாகி வருகிறது. விரைவில் விற்பனைக்கு வர உள்ள தார் 5-கதவு வாகனத்தின் சோதனை ஓட்டங்கள் கடந்த சில மாதங்களாகவே அப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது மீண்டும் தார் வாகனம் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த புதிய படங்களின் மூலம், மஹிந்திரா தார் 5-கதவு வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

mahindra thar 5-door vehicle spotted

மஹிந்திரா தார் 5-கதவு வாகனத்தின் முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம், இந்த வாகனத்தில் பொருத்தப்படும் முன்பக்க கிரில், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை முன்பை விட மெருக்கேற்றப்பட்டு உள்ளதை காண முடிகிறது. குறிப்பாக, வாகனத்தின் பின்பகுதி ரீ-டிசைனிலான டெயில்லேம்ப்கள் உடன் முன்பை விட மாடர்னாக உள்ளது.

அத்துடன், புதிய அலாய் சக்கரங்கள், பில்லரில் பொருத்தப்பட்ட கதவு கைப்பிடிகள் போன்றவற்றையும் இந்த ஸ்பை படங்களின் வாயிலாக புதிய தார் 5-கதவு வாகனத்தில் காண முடிகிறது. அதேபோல், வாகனத்திற்கு உள்ளேயும் சில முக்கியமான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சிங்கிள்-பேன் சன்ரூஃப் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

mahindra thar 5-door vehicle spotted

புதிய தார் வாகனத்தில் சன்ரூஃப் வழங்கப்படுமா என்கிற கேள்வி இருந்துவந்த நிலையில், தற்போது சன்ரூஃப் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. அத்துடன், 5-கதவு தாரில் ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்களையும் தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்களில் காண முடிகிறது. வாகனத்தின் கேபின் முழுவதும் பளிச்சிடும் நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், தற்போதைய தாரை காட்டிலும், புதிய 5-கதவு தாரின் உட்புற கேபின் இன்னும் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கும் என்பதும் உறுதியாகி உள்ளது. மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. தற்போதைய 3-கதவு தாரில் 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5-கதவு தாரில் சன்ரூஃப் உள்ளிட்ட பிரீமியம் தரத்திலான வசதிகள் வழங்கப்படுவதில் இருந்து, மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய தார் வாகனத்தை இன்னும் விலைமிக்கதாக அறிமுகம் செய்ய விரும்புவதை அறிய முடிகிறது. இவ்வாறு சோதனை ஓட்டங்கள் அடிக்கடி நடைபெறுவதால், 5-கதவு மஹிந்திரா தாரின் அறிமுகத்தை இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 18:20 [IST]
English summary
Mahindra thar 5 door vehicle spotted on test check all details here
மேலும்... #mahindra thar #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X