ராத்திரி நேரத்தில் பெங்களூருவின் காலியான சாலையில் வலம் வந்த மஹிந்திராவின் புதிய கார்.. அந்த காரா இது! வீடியோ!
இந்தியாவில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் (Mahindra Thar)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனே இப்போது கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது. இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இந்த ஐந்து கதவுகள் கொண்ட தார் கார் இருக்கின்றது.
இதையே விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அக்காரை தீவிரமாக சாலை பலபரீட்சையில் அது ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அந்த வாகனம் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் பிரத்யேகமான காட்சிகளைக் கீழே காணலாம்.
நமது வாசகர் ஒருவர் வாயிலாக கிடைத்த வீடியோ இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது 3 கதவுகள் அமைப்பைக் கொண்ட தார் ஆகும். இந்த நிலையிலேயே 5 கதவுகள் அமைப்பைக் கொண்ட தார் காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த 5 கதவு வெர்ஷனும், 3 கதவு வெர்ஷனைப் போலவே அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

பெரிய தொடு திரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்டுகள், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்களுடன் தார் 5 கதவுகள் கொண்ட வெர்ஷன் விற்பனைக்கு வர இருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்தவரை 3 கதவுகள் வெர்ஷனில் என்ன வழங்கப்படுகின்றதோ, அதே ஆப்ஷனே இதிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









