2 நாளைக்கு முன்னாடியே சம்பவத்தை செய்த மஹிந்திரா தார்... வீடியோ, ஸ்வீட்னு ஒரே கொண்டாட்டமா இருக்காங்க..
மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) செம்மையான சம்பவத்தை செய்திருக்கு. இந்த சம்பவத்தை செய்து 2 நாள் ஆகியநிலையில், இப்போதுதான் வெளி உலகத்துக்கே அதுகுறித்த தகவல் தெரிய வந்திருக்கு. அப்படி என்ன சம்பவத்தை தார் எஸ்யூவி செய்துள்ளது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) கார் விற்பனையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட காலமாக இடம் பிடித்து வந்த கார் மாடல்களில் ஒன்றே இந்த தார் எஸ்யூவி வாகனம்.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து இப்போது வரை நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் காராக அது காட்சியளிக்கின்றது. விற்பனைக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முழுமையாக நிறைவுற்றிருக்கின்றன.
இப்போதும் அதற்கு டிமாண்ட் உச்ச நிலையில் உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மஹிந்திரா தார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது 1 லட்சம் யூனிட் விற்பனை எனும் சாதனையையே தற்போது இந்தியாவில் எட்டி இருக்கின்றது.

இந்த அசாத்தியமான விற்பனை எண்ணிக்கையை தார் எட்டி இருப்பதால் ஒட்டுமொத்த நிறுவனமும் தற்போது கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கின்றது. மேலும், தார் காரை அவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக தார் காருக்கு என ஸ்பெஷல் வீடியோவை உருவாக்கி மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
இதை மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மேன் ஆனந்த் மஹிந்திராவும் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கின்றார். 2 நாளாகவே இந்த கொண்டாட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் இருந்து வருகின்றது. குறைவான விலை, அதேவேளையில், கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் விற்பனைக்குக் கிடைத்த மஹிந்திரா தார் வெறும் ஆஃப் ரோடு பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு வாகனமாக இருந்தது. ஆனால், புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு பயணத்திற்கு மட்டுமின்றி குடும்பத்துடன் பயணிக்கவும் உகந்த வாகனமாக இருக்கின்றது. இதற்காக ஏகப்பட்ட வசதிகளை புதிய தாரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
அதிக இட வசதி, அதிக பிரீமியம் அம்சங்கள் என டன் கணக்கில் புதிய அம்சங்களை புதிய தலைமுறை தார் காரில் மஹிந்திரா வாரி வழங்கி உள்ளது. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வோர்களைக் கவரும் பொருட்டே இந்த யுக்தியை அந்நிறுவனம் கையாண்டது. இதற்கான பலனையே தற்போது மஹிந்திரா பெற்றிருக்கின்றது.
அதேவேளையில் ஆஃப்-ரோடு பிரியர்களுக்கு ஏற்ற வாகனமாகவும் மஹிந்திரா தார் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு ஆஃப்ஷன்களை அது வழங்கி இருக்கின்றது. இத்துடன், 2.0 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன.
கியர்பாக்ஸ் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில் 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட டீசல் தார் காருக்கு நாட்டில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதற்கு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 17 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காருக்கு போட்டியாக தற்போதைய நிலவரப்படி சந்தையில் ஃபோர்ஸ் கூர்கா மட்டுமே உள்ளது. விரைவில் இதன் வரிசையில் மாருதி சுஸுகியின் ஜிம்னி இணைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா தார் ரூ. 10.54 லட்சம் தொடங்கி ரூ. 16.78 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. வாங்குபவர்களைக் கூடுதலாக கவரும் விதமாக இந்த காரில் ஹார்ட்-டாப் மற்றும் சாஃப்ட்-டாப் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பில் லேசான மாற்றங்கள் ஜிம்னியால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்காருக்கு இப்போதே புக்கிங்குகள் 30 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. விரைவில் இதன் விலை அறிவித்து மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








