ஆக 15ம் தேதி மஹிந்திரா கொடுக்கப்போகும் செம சர்ப்பிரைஸ்! என்னனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் தனது கார் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த நிகழ்வின் போது குளோபல் டிராக்டர் பிளாட்பார்ம் மற்றும் பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகியவையும் அறிமுகமாகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்தா நிறுவனத்தின் தார் கார் உலகின் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் மவுசு அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

mahindra thar ev

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வரும் 15ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தயாரிப்பு நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதன் அறிமுகம் மக்களை குஷிபடுத்தி உள்ளது.

தார் எலக்ட்ரிக் கார் குறித்து தற்போது பெரிய அளவில் தகவல் எதுவும் மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கனவே மஹிந்திரா தார் கார் தயாராகும் அதே பிளாட்பார்மில் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட் செய்ய மாற்றங்களை செய்து தார் எலெக்ட்ரிக் காரை உருவாக்கப் போகிறதா? அல்லது தார் எலெக்ட்ரிக் காருக்காக புதிய பிளாட்பாரம் உருவாக போகிறதா என்பதை மஹிந்திரா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

mahindra thar ev

மஹிந்திரா நிறுவனத்திடம் இங்லோ என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான பிரத்தியேக பிளாட்பார்ம் இருக்கிறது அந்நிறுவனத்தின் அடுத்தடுத்து வரவுள்ள எஸ்ஐவி கார்கள் எல்லாம் இதை அடிப்படையாகக் கொண்டுதான் வரப்போகிறது. மஹிந்திரா நிறுவனமும் டாடா நிறுவனத்திற்கு போட்டியாக வரிசையாக எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கப்போகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் ஆஃப் ரோடு அம்சங்கள் கொண்ட கார் மற்றும் 4 வீல் டிரைவ் காராக இருப்பதால் இதன் எலக்ட்ரிக் வெர்ஷனில் இரண்டு மோட்டார் செட்டப் இருக்கும் ஒரு மோட்டார் செட்டப் முன்பக்க ஆக்ஸிலிலும், மற்றொரு மோட்டார் பின்பக்கம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mahindra thar ev

இதுபோக ஒவ்வொரு வீலுக்கும் தனித்தனி எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு டார்க் மாடுலேட் மற்றும் டிராக்ஷன் செய்ய ஆஃப் ரோடிங்கின் போது வரும் சிக்கல்களை சமாளிக்க பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கார் குறித்த டீசரை மகேந்திரா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த டீசரில் பின்பக்க டெயில் லைட் டிசைன் காண்பிக்கப்படுகிறது. இது தற்போது உள்ள தார் காரில் உள்ள டிசைனை போலவே இருக்கிறது. இதன்படி பார்த்தால் தார் எலக்ட்ரிக் காரில் டிசைன் அளவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கலாம். இருந்தாலும் இந்த கார் பெட்ரோல் கார் அல்ல இவி கார் என்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் கான்செப்ட் வெர்ஷனை தான் அறிமுகப்படுத்துகிறது. இது தயாரிப்பிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இதே நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் பிக்கப் டிரக்கின் கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஸ்கார்பியோ என் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட வாகனமாகும்.

மஹிந்திரா தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரும் தயாராகி வருகிறது. இதான் தயாரிப்பும் எப்பொழுது தயாராகி எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புதிய பிக்கப் குறித்த புரோடெக்ஷன் வெர்ஷன் எப்பொழுது வெளியாகும் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும் கௌரவமும் இருக்கிறது. இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் கார் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் இந்தியாவிற்கு வருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 5, 2023, 19:14 [IST]
English summary
Mahindra thar ev concept premiering on august 15th
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X