நண்டைபோல நகரும் மஹிந்திரா கார் விரைவில் வருகிறது! நமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கே இப்படி ஒரு காருதான் தேவ

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக தார் எஸ்யூவி இருக்கின்றது. இந்த காருக்கு இப்போது இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் உடன் சேர்த்து விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளது. ஆட்டோ கார் இந்தியா தளமும் இதுகுறித்த குறிப்புகளை தன்னுடைய செய்தியில் வெளியிட்டு இருக்கின்றது. மேலும், இந்த எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

Mahindra thar ev

இந்த தகவல் தார் எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்யூவி கார் மாடலே தார் ஆகும். இந்த காரில் மஹிந்திரா மின்சார வெர்ஷனை உருவாக்கி இருப்பது உண்மையில் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகையும் மகிழ்விக்கக் கூடிய ஓர் செயலாக மாறி இருக்கின்றது.

குறிப்பாக, ஆஃப்-ரோடு பயணத்தை விரும்புவோருக்கு இந்த தகவல் மிகப் பெரிய விருந்தளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. தெற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா தார் எஸ்யூவி கார் மட்டுமல்ல மற்றுமொரு கான்செப்ட் கார் மாடலும் அன்றைய தினத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

Mahindra thar ev concept august

ஸ்கார்பியோ என் பிக்-அப் டிரக் ரக கான்செப்ட் மாடலையே நிறுவனம் அன்றைய தினத்தில் வெளியீடு செய்ய இருக்கின்றது. ஆகையால், உண்மையிலேயே வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி வாகன காதலர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிப்பு நாளாக மாற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இதில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் தயார் செய்யப்பட்டு இருக்கும் தார் எஸ்யூவி 4X4 தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. பொதுவாக, மின்சார கார்களில் இரட்டை மின் மோட்டார் செட்-அப்பே பயன்படுத்தப்படும். ஆனால், இதில் நான்கு மின் மோட்டார்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahindra thar ev concept coming soon

இத்துடன், யாருமே எதிர்பார்த்திராத மற்றும் ஓர் வசதியும் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நண்டை போல நகரும் வசதி எலெக்ட்ரிக் தார் எஸ்யூவிக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இந்த அம்சத்துடன் உலக சந்தையில் ஹம்மர் இவி விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

தார் எலெக்ட்ரிக் கான்செப்டில் 45 டிகிரி வரை வீல்கள் திரும்பும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே நண்டுபோல் நகர அக்காரை அனுமதிக்கின்றது. இதனால், மிக நெருக்கமான பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள முடியும். மேலும், காரையும் சுலபமாக வெளியே எடுக்கவும் இந்த அம்சம் மிகுந்த உதவியாக இருக்கும்.

இது இந்தியர்களை குஷியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், இது என்ன மாதிரியான திறனை வெளிப்படுத்தும், மணிக்கு எத்தனை கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பது போன்ற எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. இதேபோல் இதன் ரேஞ்ஜ் திறனும் வெளியிடப்படவில்லை. தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இரண்டு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது 34.5 kWh மற்றும் 39.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது கிடைக்கின்றது. இரண்டும் வெவ்வேறு ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடியவை ஆகும். இதை போலவே விரைவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் தார் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும், அதீத தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாகவும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனும் அளவிற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் கார் மாடலையே மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 1, 2023, 19:52 [IST]
English summary
Mahindra thar ev concept will be unveil on coming august 15
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X