உலககோப்பைக்கு ஸ்பான்ஸராகி மஹிந்திரா போட்ட மெகா ஸ்கேட்ச், வெளிநாடுகளிலும் நல்ல ரீச் கிடைக்கும்!

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஸ்பான்ஷராக இணைந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் மற்றும் தார் ஆகிய கார்களை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஐசிசி ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்த போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் வைத்து நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க உள்ள இந்த போட்டி நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

mahindra icc world cup 2023

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விளம்பரம் செய்தால் அதிகமான மக்களை சென்றடைய முடியும் என்பதால் கிரிக்கெட் போட்டியில் விளம்பரம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போடும். இந்த கிரிக்கெட் போட்டிகளில் விளம்பரம் செய்வதன் மூலம் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் ஒரு நிறுவனத்தை விளம்பரப்படுத்த முடியும். இந்நிலையில் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தை இதன் மூலம் விளம்பரப்படுத்த ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மஹிந்திரா நிறுவனம் சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஐரோப்பாவில் தனது காலி இடத்தை பதிக்கவும் அடுத்தடுத்து தனது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை இதற்கான மிகப்பெரிய விளம்பர தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர் மூலம் மஹிந்திரா நிறுவனம் தனது ஆட்டோமொபைல் செக்டார், விவசாய வாகனங்கள் செக்டார் உள்ளிட்ட அனைத்து செக்டார்களிலும் உள்ள வாகனங்களை விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நான்காவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தற்போது எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலேயே எஸ்யூவி காரர்களை மட்டும் விற்பனை செய்யும் முறை நிறுவனமாக மஹிந்திரா இருக்கிறது. மகேந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என், எக்ஸ்யூவி 300, பொலிரோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் செக்மெண்டிலும் தனது அதிகத்தை செலுத்த முயற்சி செய்து வருகிறது. தற்போது மஹிந்திரா நிறுவனத்திடம் முழு எலெக்ட்ரிக் காராக எக்ஸ்யூவி 400 கார் விற்பனையாகி வருகிறது. மேலும் பல புதிய கார்களை மஹிந்திரா நிறுவனம் எனது எலெக்ட்ரிக் செக்மெண்டில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் தனது விற்பனையில் 19 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 70,350 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் விற்பனையை பார்க்கும் போது அப்பொழுது 59,049 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தது.

கடந்த மாதம் விற்பனையான 70 ஆயிரம் கார்களில் 37,270 கார்கள் எஸ்யூவி காரர்களாக விற்பனை செய்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் தான் நிறுவனத்தின் முக்கியமான காராக இருக்கிறது. இந்த கார் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது ஒரு லட்சம் காரர்களுக்கும் அதிகமாக விற்பனை ஆகி உள்ளது. அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய விற்பனையை இந்த கார் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரின் விற்பனைக்கு இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான் காரணமாக கூறப்படுகிறது. பாதுகாப்பான காரை விரும்புபவர்கள் இந்த காரை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் உலகக் கோப்பையில் இந்த கார் மேலும் விளம்பரபடுத்தப்படுவதன் மூலம் இதன் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 14:14 [IST]
English summary
Mahindra to be the sponsor of icc mens cricket world cup 2023 on disney star
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+