மஹிந்திரா தேதிய குறிச்சிட்டாங்க! போட்டிக்கு தயாராகும் டாடா! நடக்கபோறாத பொறுத்திருந்து பாருங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் அறிமுகம் குறித்தும் எலெக்ட்ரிக் கார்கள் எதிர்காலம் குறித்தும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் பியூச்சர்ஸ்கேப் என்ற நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மகேந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வெர்ஷன்களுக்கான புதிய லோகோவான இன்ஃபினிட்டி லோகோவை அறிமுகப்படுத்தியது. இது மட்டுமில்லாமல் தனது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களையும் அறிமுகப்படுத்தியது.

mahindra electric suv launch

மஹிந்திரா நிறுவனம் கடந்தாண்டு ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களுக்கான இன்ங்குலோ என்ற பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட போகும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் குறித்து தற்போது வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் மோட்டார்களை பிஒய்டி, வேலியோ நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்த நிலையில் இனி ஃபோக்ஸ்வேகன் நிறுவனமிடமிருந்தும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிடப் போகும் எக்ஸ்யூவி இ மாடல் காரில் வேலியோ நிறுவனத்திலிருந்து பெறப்பட போகும் ரியர் ஆக்ஸில் மோட்டாரை அறிமுகப்படுத்தியது. இது பின் வீல் டிரைவ் மட்டுமே வழங்கும்.

mahindra electric suv launch

எக்ஸ்யூவி 700 காரில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல்-வில் டிரைவ் கான்ஃபிகரேஷன்கள் உள்ளன. ஆனால் எக்ஸ்யூவி 8 காரில் ரியர் வில் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே இருக்கும். இந்த மோட்டார் 170 கிலோ வாட் அதாவது 231 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எக்ஸ்யூவி 400 காரை விட அதிக திறன் கொண்ட காராக இருக்கும்.

அடுத்ததாக அந்நிறுவனம் வெளியிட போகும் பிஇ 7 ஆகிய கார்களுக்கு எலெக்ட்ரிக் மோட்டாரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2 வீல் மௌண்டட் மோட்டாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 286 எச்பி பவரையும் 535 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

mahindra electric suv launch

இதில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கும் அதில் முன்பக்கம் கூடுதலாக ஒரு மோட்டார் பொருத்தப்பட்டு அது 109எச் பி பவரையும் 135 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த இரு சிஸ்டமும் சேர்ந்து எவ்வளவு பவரை வெளிப்படுத்தும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கூடுதல் தகவலாக இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் 79 கிலோ வாட் அவர் எல்எஃப்பி செல்களை பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. மகேந்திரா எக்ஸ்யூவி 400 காரில் என்எம்சி கெமிஸ்ட்ரி செல்களை தான் பயன்படுத்தியது. எல்எஃப்பி செல்களில் அதிக பவரை சேமிக்க முடியும் என்பதால் அதே நேரம் குறைவான டிஸ்சார்ஜ் தான் ஆகும் என்பதாலும் 0-80 சதவீத சார்ஜ் 30 நிமிடத்தில் ஏற்றி விடலாம் என்பதாலும் இந்த பேட்டரியை தேர்வு செய்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு ஆடியோ சிஸ்டத்தை தேர்வு செய்ய ஏ ஆர் ரகுமானை நியமித்துள்ளது. அவர் 16 ஸ்பீக்கர் கொண்ட டால்பி அட்மாஸ் 3டி சரவுண்ட் சிஸ்டம் ஆக்டிவ் வாய்ஸ் கேன்சல் இன்ஃபோடெயின்மெண்ட் ஹார்ட்வேர் சிஸ்டம் கொண்ட ஆடியோ சிஸ்டத்தை செட்டப் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தவரை 12.3 இன்ச் 720p ஸ்கிரீன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ரினோ எக்ஸ் பிளாட்பார்மல் இருந்து இன் ப்ளூ பிளாட்பார்மிற்க்கு மாற்றப்படும். இதுபோக ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் விண்டு ஸ்கிரீனில் ஏஆர் விஷுவல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கும்.

மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் கனெக்டெட் தொழில்நுட்பத்தில் ஆன் போர்டில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் ஓடிஏ அப்டேட் மற்றும் வி டூ எக்ஸ் தொழிற்நுட்பம் கேமரா ரேடார் மற்றும் அல்ட்ரா சோனிக் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டு தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி இ8 வாகனத்தை தான் முதல் புதிய எலக்ட்ரிக் எஸ்வி காராக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்யூவி 700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கார் 7 சீட் லே அவுட் உடன் இங்குலோவ் ஸ்கேட் போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு எலெக்ட்ரானிக் ஆர்க்கிடெக்சர் உடன் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி கார் ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் கொஞ்சம் ஸ்போர்டியர் லுக் கொண்ட எஸ்யூவி வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு வரிசை சீட்டுகள் தான் இடம் பெறும் எக்ஸ்யூவி இ8-ல் உள்ள அதே மெக்கானிக்கல் மற்றும் இன்டீரியர் அம்சங்கள் தான் இந்த காரிலும் இருக்கும்.

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக பிஇ என்ற ரக எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது அதில் பிஇ 05 என்ற எெலக்ட்ரிக் கார் கூபே ரக எஸ்யூவி காரராக இருக்கிறது. இது வரும் அக்டோபர் மாதம் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஃப்ரோடை மையமாகக் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக பிஇ07 கார் இது 4.6 மீட்டர் நீளம் கொண்ட எஸ்யூவி காராக இருக்கிறது இது பிஇ05 காரை விட அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போக மஹிந்திரா நிறுவனம் பிஇ09 என்ற பெரிய ரக எஸ் யூ வி காரை தயாரித்து வருகிறது. இந்த காரின் அறிமுகம் குறித்து இதுவரை மஹிந்திரா நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த கார் விற்பனைக்கு வர 2027 ஆம் ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2023, 11:34 [IST]
English summary
Mahindra unveils release schedule for four electric suvs everything you should be aware of
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X